மக்களை பாதாளத்தில் தள்ளும் அரசாங்கத்தின் சதி

புதிய சட்டம் ஒன்றின் ஊடாக, மத்திய வங்கியின் தலையீட்டின் மூலம் பல்வேறு சந்தர்ப்பங்களில் விவசாய செய்கைகளுக்கு, வியாபார முயற்சிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைக் கடன்களை முற்றாக இரத்து செய்வதற்கு யானை காகம் மொட்டு அரசாங்கம் தயாராகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த நாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறைந்த வட்டி விகிதத்தில் நிதிக் கடன்களை வழங்க மத்திய வங்கி உதவியதாகவும், சுனாமி அனர்த்தம் வந்தபோது அழிந்து போன தொழில் முயற்சிகளை மீள உருவாக்கவும், வியாபார முயற்சிகளையும் மீள உருவாக்கவும் 5,6 சதவீத வட்டியில் கடன் வழங்கியதாகவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது சுற்றுலா வணிகம் வீழ்ச்சி கண்ட போது சுற்றுலா வணிகத்தில் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் வட்டியில்லா கடன்கள் இதன் அடிப்படையிலையே வழங்கப்பட்டன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவா என தான் கேட்க விரும்புவதாகவும், இது மக்களின் வாழ்க்கையை அழிக்கும் முன்மொழிவாகவும் எனவும், இதன் காரணமாகவே சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தாம் கோரியதாகவும், அக்கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

சந்தை வட்டி விகிதம் 15 சதவீதமாக இருந்தபோது, விவசாயிகளுக்கு 7 சதவீத குறைந்த வட்டியில் கடன் வழங்கியதாகவும், வங்கிக்கு 8 சதவீதம் நஷ்டம் ஏற்பட்டாலும் மத்திய வங்கி குறித்த நஷ்டத்தை ஈடு செய்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசாங்கம் இந்த வட்டி மானிய கடனை இரத்து செய்ய முயல்வதாகவும், ஏற்றுக்கொள்ளப்பட்ட கடன் உத்தரவாதிகள் திட்டத்தை நிறுத்தவும் முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மாவனெல்ல நகரில் நேற்று (19) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts