சூர்யா விலகல் ‘வணங்கான்’ படத்தில் அதர்வா?

வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டதாக பாலா அறிவித்த நிலையில் அதர்வா நடிக்க வாய்ப்பு உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. பாலா இயக்கிய ‘வணங்கான்’ படத்தில் சூர்யா நடித்து வந்தார்.
முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்து வந்த நிலையில் படப்பிடிப்பில் இருந்து சூர்யா திடீரென்று வெளியேறினார். இதனால் படவேலைகள் நிறுத்தப்பட்டது. பல மாதங்கள் ஆகியும் படப்பிடிப்பை தொடங்கவில்லை.
தற்போது சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதனால் வணங்கான் படம் கைவிடப்பட்டு விட்டதா? என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டதாக பாலா அறிவித்துள்ளார்.
ஆனாலும் வணங்கான் படப்பணிகள் தொடரும் என்றும் தெரிவித்து இருக்கிறார். இதனால் சூர்யாவுக்கு பதில் ‘வணங்கான்’ படத்தில் நடிக்கப்போவது யார் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவியது. ஆர்யா நடிக்கலாம் என்று பேசப்பட்டது.
இந்த நிலையில் அதர்வா நடிக்க வாய்ப்பு உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
அதர்வாவிடம் தொடர்பு கொண்டு இதுகுறித்து பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாலா இயக்கிய பரதேசி படத்தில் அதர்வா நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts