புரூஸ் லீ வேடத்தில் மகன் மேசன் நடிக்கிறார்

பிரபல ஹாலிவுட் டைரக்டர் ஆங் லீ புரூஸ் லீ வாழ்க்கை கதையை இயக்குவதால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. குங்பூ தற்காப்பு கலையில் ஜாம்பவானாக உலகம் முழுவதும் அறியப்பட்ட புரூஸ் லீயின் வாழ்க்கையை மையமாக வைத்து ஏற்கனவே சில படங்களும், ஆவணப்படங்களும் வந்துள்ளன.

இந்த வரிசையில் புரூஸ் லீ வாழ்க்கையை வைத்து இன்னொரு படமும் தயாராக உள்ளது. இந்த படத்தை பிரபல ஹாலிவுட் டைரக்டர் ஆங் லீ இயக்க உள்ளார். இவர் டைரக்டு செய்த பல ஹாலிவுட் படங்கள் விருதுகள் பெற்றுள்ளன.

லைப் ஆப் பை படத்தை இயக்கி இந்திய ரசிகர்களிடமும் பிரபலமானார்.

இந்த படத்துக்கு 4 ஆஸ்கார் விருதுகள் கிடைத்தன.

அவர் புரூஸ் லீ வாழ்க்கை கதையை இயக்குவதால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. புரூஸ் லீ வேடத்தில் மகன் மேசன் நடிக்கிறார். இவர் ஹேங் ஓவர் 2 படத்தில் டெடி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். 32 வயதில் சந்தேகத்துக்குரிய வகையில் இறந்த புரூஸ் லீயின் வீரம், சாகசங்கள், அவருக்கு எதிராக எதிரிகளின் சதித்திட்டம் உள்ளிட்ட அனைத்தும் படத்தில் இடம்பெற உள்ளன.

Related posts