நடிப்பில் இருந்து சிறிது ஓய்வு நடிகர் அமீர்கான் அதிரடி

பாலிவுட் நடிகர்களில் முன்னணி நடிகர் அமீர்கான். 35 ஆண்டுகாலமாக பாலிவுட் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென தனி முத்திரையை பதித்த திறமையான நடிகர் அமீர்கான்.

நடிகர் அமீர் கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் லால் சிங் சத்தா. நாடு முழுவதும் வெளியான இந்தப் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கருத்து நிலவிய நிலையில், வசூல் ரீதியாக கடும் இழப்பை சந்தித்தது. இதனால், அடுத்ததாக அமீர் கான் நடிக்கவிருந்த ‘சாம்பியன்ஸ்’ படத்தில் அவர் நடிக்கமாட்டார் என்று தகவல்கள் பரவி வந்தன.

இந்நிலையில், சாம்பியன்ஸ் படம் குறித்து அறிவிப்பை வெளியிட்டு அமீர் கான் பேசியதாவது: “சாம்பியன்ஸ் படத்தின் கதை அற்புதமான, அழகான கதை. லால் சிங் படத்திற்கு பிறகு இந்த படத்தில் நான் நடிக்க இருந்தேன். ஆனால், தற்போது நான் ஓய்வெடுக்க விரும்புகிறேன். சாம்பியன்ஸ் சிறந்த படம் என்பதால் சோனி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளேன்.

சாம்பியன்ஸ் படத்தில் நடிக்க வேறு நடிகரை தேர்வு செய்யவுள்ளேன். நான் எனது அம்மா, குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புகிறேன். இதற்காக படத்தில் நடிப்பதிலிருந்து தற்காலிகமாக விலகி இருக்க முடிவு செய்துள்ளேன்.

நடிப்பில் மட்டுமே கடந்த 35 ஆண்டுகளாக கவனம் செலுத்தினேன். என்னுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கு இது நியாயமாகாது என்று கருதுகிறேன். அவர்களுடன் நேரம் ஒதுக்க இதுவே சரியான தருணமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

அடுத்த ஆண்டிலிருந்து ஒன்றரை ஆண்டுகள் நடிப்பதிலிருந்து ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளேன். எனது உறவுகளுடன் சந்தோஷமாக நேரத்தை செலவழிக்கும் காலகட்டத்தில் நான் உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

யார் இந்த அமீர்கான்…?
குழந்தை நட்சத்திரமாகத் திரையுலகில் அடியெடுத்து வைத்த அமீர்கான்.
இன்று வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பல வெற்றிப் படங்களை கொடுத்து உள்ளார்.

1973 ஆம் ஆண்டு அவரது மாமா நசீர் ஹூசைன் படமான ‘யாதோங் கி பாராத்’ என்ற திரைப்படத்திலும் தொடர்ந்து மாதோஷ்’ என்ற திரைப்படத்தில் 1 ஒரு குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

1984ல், கேதன் மேத்தா படமான ‘ஹோலி’யில் ஹீரோவாக அறிமுகமானார். 1986: ரீனா தத்தா என்ற இந்து பெண்ணை காதலித்து பல்வேறு மத எதிர்ப்புகளையும் மீறி ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி,

1986 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.

2002ல், ரீனா தத்தாவிடம் விவாகரத்து கோரியதால், அவர்கள் இருவரும் பிரிந்தனர்.

2005: டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி,

2005 ஆம் ஆண்டில், உதவி இயக்குனராக இருந்த கிரண் ராவ் என்பவரை மணமுடித்தார். தற்போது தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், எழுத்தாளராகவும் உள்ளார். இந்திய அரசின் மிக உயரிய விருதுகளான ‘பத்மஸ்ரீ’ மற்றும் ‘பத்மபூஷன்’ போன்ற விருதுகளைப் பெற்று உள்ளார். 17 முறை பிலிம்பேர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, 7 முறை பிலிம்பேர் விருதுகளையும், மூன்று தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

Related posts