இலங்கை கிரிக்கெட் வீரருக்கு ஜாமின் மறுப்பு

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா. இவர் ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியில் இடம்பெற்றிருந்தார்.
ஆனால், காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்காமல் தொடரில் இருந்து வெளியேறினார் இதனிடையே, குணதிலாகா ஆன்லைன் ‘டேட்டிங் ஆப்’ மூலம் 29 வயது இளம்பெண்ணுடன் பழகியுள்ளார்.
அந்த பெண்ணை கடந்த 2-ந் தேதி சிட்னியில் ரோஸ் பே பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு வரவைத்துள்ளார். அங்கு அப்பெண்ணை குணதிலகா பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுதொடர்பாக அந்த பெண், நியூ சவுத் வேல்ஸ் போலீசில் புகார் அளித்தார். தனது அனுமதியின்றி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குணதிலகா மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார்.
அந்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குணதிலகாவை நேற்று கைது செய்தனர். அவர் சுரி ஹில்ஸ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், கைது செய்யப்பட்ட குணதிலகா சிறையில் இருந்தவாறு இன்று டவுணிங் சென்டர் நீதிமன்றத்தில் காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் குணதிலகாவுக்கு ஜாமின் வழக்க மறுப்பு தெரிவித்தார்.
இதனால், குணதிலகா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Related posts