கொள்ளையன் கலிங்க மாகன் குடும்பத்தை சேர்ந்தவர் ராஜபக்ச

சுபிட்சத்தின் தொலைநோக்கை முன்னிலைப்படுத்தி நாட்டிற்கு சுபீட்சத்தை கொண்டு வர 2019 ஆம் ஆண்டு வீராப்பு பேசி ராஜபக்சக்கள் வந்தாலும், இறுதியில் செல்வத்தையே இழக்கும் அளவிற்கு நாட்டை வக்குரோத்தாக்கினர் எனவும், மலைநாட்டு கிளர்ச்சியில் வெள்ளையர்களைப் போலவே கலிங்க மாகனின் படையெடுப்புகளாலும் நாட்டிலுள்ள களஞ்சியங்கள் உட்பட அனைத்து தோட்டங்களையும் அழித்தது போல், இவர்களும் கடந்த காலத்தைப் போலவே நாட்டின் விவசாயத்தையும் முற்றிலுமாக அழித்தார்கள் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ​நேற்று (27) தெரிவித்தார்.

எனவே, ராஜபக்சக்கள் காலிங்க மாகான் தலைமுறையினருக்கே சொந்தமானவர்கள் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவரும், நாட்டை விட்டு தப்பி ஓடிய பசில் ராஜபக்சவும் ஆச்சரியமான முன்னோக்கிய மாற்றத்தை ஏற்படுத்த மீண்டும் வருவதாக மொட்டுக் கட்சியின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டாலும், இந்நாட்டை வங்குரோத்தடையச் செய்த குற்றத்தின் முக்கிய குற்றவாளி அவர் எனவும், அவர் மிகுந்த ஊழல்வாதி எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பழமையான நாகரீகத்தையும், பழமையான கலாசாரத்தையும் கொண்டிருந்த எமது நாடு தற்போது உலக நாடுகளிடம் பிச்சை எடுக்கும் நிலைக்கு ராஜபக்சர்களால் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மொட்டுவின் செயலாளர் வருவதாகக் கூறும் நபர், நாட்டை அழித்த கலிங்க மாகன் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் டொலர்கள் தேவை என்று கூறினாலும், சுற்றுலாத்துறை, தகவல் தொழில்நுட்பம், ஆடைத்துறை போன்ற டொலர்களை ஈட்டும் ஏற்றுமதித் துறைகளுக்கு அதிகளவில் வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் இந்த செயல்களை எதிர்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டாது எனவும்,நாட்டுக்கு டொலர்களை கொண்டு வரும் துறைகளைப் பலப்படுத்துவதே மேற்கொள்ளப்பட வேண்டிய பணி எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

சிந்ததொரு வேலைத்திட்டத்தின் மூலமே இந்நாட்டை மீளக்கட்டியெழுப்ப முடியும் எனவும், இல்லை, இயலாது என்ற வார்த்தைகளை அரசியல் சொற்களஞ்சியத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும், எதிர்க்கட்சியாக, அது நடைமுறையில் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், ஆட்சி அதிகாரம் இல்லாவிட்டாலும், ஐக்கிய மக்கள் சக்தியால் மக்களுக்காக பல பணிகளைச் செய்ய முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வெல்லவாய தேர்தல் தொகுதிக்கான தொகுதிக் கூட்டம் கதிர்காமம் பிரதேசத்தில் இடம் பெற்றதோடு இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts