ரூ. 80 இலட்சம் வழங்கினாரா அஸாத் சாலி?

கோடிக்கணக்கான நிதியை மோசடி செய்துள்ளாரென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி தொடர்பாக மேற்கொள்ளப்படும். விசாரணைகளின்படி வாக்குமூலமொன்றை பெற்றுக் கொள்வதற்காக முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி நேற்று குற்றத்தடுப்பு விசாரணை

திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவரிடமிருந்து வாக்குமூலமும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. காணியொன்றை விற்று பெற்றுக் கொண்ட 80 இலட்சம் ரூபா பணத்தை அசாத் சாலி சந்தேக நபரான பெண்ணிடம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜானகி சிறிவர்த்தன என்ற பெயருடைய பெண் மூலம் அந்தப் பணம் சந்தேக நபரான பெண்ணுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கோடிக்கணக்கான நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளாரென்ற சந்தேகத்தின் பேரில் திலினி பிரியமாலி குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்தினால் கடந்த ஐந்தாம் திகதி கைது செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவுக்கமைய அவர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக தற்போது 11 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
—–

Related posts