10 இலட்சம் அரச உத்தியோகத்தர்கள்

நாட்டிலுள்ள 16 இலட்சம் அரச உத்தியோகத்தர்களில் சுமார் பத்து இலட்சம் பேர் எந்தவொரு வினைத்திறனான சேவையையும் வழங்கவில்லை என அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அரச சேவையை அரச உத்தியோகத்தர்களே விமர்சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குருநாகல் பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் ரொஷான் ரணசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

—-

அமைச்சர்களான பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோரை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி மற்றும் அதற்குப் பின்னரான காலப்பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிப்பு மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பான விசாரணைகள் தொடர்பிலேயே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி விசாரணைக்கு தேவையான அடிப்படை உண்மைகள் இன்று பதிவு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts