காங்கிரஸ் எம்.எல்.ஏ திடீர் ராஜினாமா

ராஜஸ்தான் மாநிலம் சுரானா கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இந்திரகுமார் மேக்வால் என்ற தலித் சிறுவன் படித்துவந்தான்.
9 வயதான அந்தச் சிறுவன், பள்ளியில் உள்ள தண்ணீர் பானையில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்துள்ளான். அப்போது பள்ளி ஆசிரியர் அவனை தாக்கியதாக கூறப்படுகிறது.
அதில் படுகாயமடைந்த அச்சிறுவன், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவன் உயிரிழந்தான். இதனையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவியது. பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்த செயலுக்கு கணடனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சிறுவன் உயிரிழந்த ராஜஸ்தான் மாநில அட்ரு சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பனாசந்த் மேக்வால் ராஜினாமா செய்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, “சிறுவன பலியான செய்தி கேட்டு மிகுந்த காயமடைந்தேன். ஜலோரில் 9 வயது தலித் மாணவன் மரணம் என்னை மிகவும் பாதித்துள்ளது. நான் எனது ராஜினாமாவை சமர்ப்பிக்கிறேன்.
தலித்துகள் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்கள் தொடர்ந்து அட்டூழியங்கள் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாகி வருகின்றன” என்று வேதனையுடன் தெரிவித்தார்.
ராஜஸ்தானில் ஆளுங்கட்சியாக உள்ள காங்கிரசுக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Related posts