கருத்தடை சாதனங்களுக்கும் தட்டுப்பாடு!

விற்றமின் மாத்திரைகள் மற்றும் போசாக்குணவுகளின் கடுமையான பற்றாக்குறையால் கர்ப்பிணிப் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்

நாட்டின் பல பகுதிகளில் உள்ள தாய் சேய் சுகாதார நிலையங்களில் கடந்த சில மாதங்களாக இரும்புச் சத்து மற்றும் கால்சியம் மாத்திரைகள் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது

கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் சத்துணவுப் பொதிகள் பற்றாக்குறையாக இருப்பதாக மருத்துவச்சிகள் புகார் கூறுகின்றனர்
மேலும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் கர்ப்பிணிப் பெண்கள் திரிபோஷா, விற்றமின்கள் மற்றும் பிற மருந்துகளை நம்பியிருகின்றனர். பெரும்பாலான பகுதிகளில், குறைந்த வருமானம் கொண்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பொதிகள் கூட கிடைப்பதில்லை.

மேலும் கருத்தடை மாத்திரைகள் மற்றும் பிற கருத்தடை சாதனங்கள் கையிருப்பில் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது .
கருத்தடை மாத்திரைகள் இல்லாததால் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என மூத்த மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தாம் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவைச் சந்தித்து விற்றமின், இரும்புச் சத்து மாத்திரைள்
மற்றும் திரிபோஷ தட்டுப்பாடு குறித்து தெரிவித்ததாக அரசாங்க மருத்துவச்சிகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவக்கு தெரிவிக்கிறார்.

இவ்வாறான நிலைமையில் கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவு காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ண வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Related posts