தனுஷ் நடித்துள்ள ‘திருச்சிற்றம்பலம்’

நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’.

இந்த படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திருச்சிற்றம்பலம் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இந்த இந்த படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகம் செய்தது.

இந்த நிலையில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 18-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts