நடிகர் சூர்யாவுக்கு ‘ரோலக்ஸ்’ கைக்கடிகாரத்தை

விக்ரம் திரைப்படத்தில் “ரோலக்ஸ்'” என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். சென்னை, மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ்.

இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 03-ஆம் தேதி வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான 3 தினங்களில் சுமார் 100 கோடிக்கு மேல் வசூலித்து விக்ரம் திரைப்படம் சாதனை படைத்தது.

இதை முன்னிட்டு படம் வெற்றி பெற்றதால் கமல்ஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்-க்கு நேற்று விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கினார்.

இந்த நிலையில் விக்ரம் படத்தில் நடித்த நடிகர் சூர்யாவுக்கு ‘ரோலக்ஸ்’ கைக்கடிகாரத்தை கமல்ஹாசன் இன்று பரிசளித்துள்ளார். விக்ரம் திரைப்படத்தில் “ரோலக்ஸ்'” என்ற வில்லன் கதாபாத்திரத்தில் சில நிமிடங்கள் மட்டுமே சூர்யா தோன்றினாலும் அவரது கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தது.

குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன் “ரோலக்ஸ்” என்ற வார்த்தை டுவிட்டரில் ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. ‘ரோலக்ஸ்’ கைக்கடிகாரத்தை கமல்ஹாசன் பரிசளித்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் சூர்யா ” இப்படி ஒரு தருணம் வாழ்க்கையை அழகாக்குகிறது! உங்கள் ,ரோலக்ஸுக்கு’ நன்றி அண்ணா என பதிவிட்டுள்ளார்.

Related posts