புதிய அமைச்சர்கள் விபரம் இதோ..!

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் சிலர் பதவியேற்றுள்ளதாக தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர்கள் பதவியேற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் நிதி அமைச்சராக அலி சப்ரியும், பெருந்தெருக்கள் அமைச்சராக ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவும் பதவியேற்றுள்ளனர்.
அத்துடன் கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்த்தனவும், வெளிவிவகார அமைச்சராக ஜீ. எல்.பீரிஸூம் பதவியேற்றுள்ளனர்.

—–

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த 14 உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

——

இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவண்ண மற்றும் துமிந்த திசாநாயக்க ஆகியோர் தமது பதவிகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது நடைபெறும் ஆளுங்கட்சி குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆளுங்கட்சி குழு கூட்டம் ஒன்று ஜனாதிபதி, பிரதமர் மற்றும் 138 பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

—–

ஆளுங்கட்சி குழு கூட்டம் ஒன்று ஜனாதிபதி, பிரதமர் மற்றும் 138 பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் குறித்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எட்டப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

—–

நாட்டின் பிரதான பௌத்த பீடங்களான மல்வத்த, அஸ்கிரிய, ராமாஞ்ய, அமரபுர மஹா நிக்காயவின் சங்கைக்குரிய மஹா நாயக்க தேரர்கள் கூட்டாக ஒன்றிணைந்து கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
அமைச்சரவையை முழுமையாக கலைத்து இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கூட்டாக ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றின் ஊடாக இந்த கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

—–

பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரது வீடுகளுக்கு முன்பாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சமல் ராஜபக்ஷவின் தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தப்படுவதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
ஜனக பண்டார தென்னகோனின் வீடு மற்றும் ரோஹித அபேகுணவர்தனவின் அலுவலகம் முன்பாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் பல வீதிகளின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தார்.

Related posts