மிளகாய்த்தூள் வீச்சு வீரர்களும் ஜனாதிபதியும் சந்திப்பு..

சிறீலங்கா பராளுமன்றத்தின் மிளகாய்த் தூள் வீச்சு வீரர்களுடன் இன்று ஜனாதிபதி சந்திக்க இருக்கிறார். அதேவேளை சபாநாயகர் உட்பட சில வீரர்கள் போகவில்லை.

மிளகாய்த் தூளை தண்ணீரில் கரைத்து விசிறியடிக்கும் கூட்டத்திடம் உரிமை கேட்டு போராடிய தமிழ் தலைமைகளும் அங்கு போயுள்ளன.

இன்றைய கண்களை எரித்து கண்ணீர் வரவைக்கும் செய்தி சிதறல்கள்..:

—————–

ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பிற்கு தான் கலந்து கொள்ளப்போவதில்லை என சபாநாகயர் கரு ஜயசூரிய ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி சந்திப்பொன்று இன்று (18) பி.ப. 5.00 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

பாராளுமன்றத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற அரசியல் அமைதியின்மை மற்றும் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவந்து பாராளுமன்ற நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதியினால் இந்த சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளினது தலைவர்களுக்கும் இந்த சந்திப்பில் கலந்துகொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இருப்பின் சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த சந்திப்பிற்கு கலந்து கொள்ளப் போவதில்லை என தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் இது தொடர்பில் தொலைபேசி மூலம் உரையாடியதாக சபாநாயகரின் ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.

இதன்போது கட்சி தலைவர்களுடனான சந்திப்பில் தன்னுடைய வருகை தேவையற்ற விடயம் என சபாநாயகர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற உள்ள சந்திப்பின் போது எடுக்கப்பட உள்ள தீர்மானத்தை தனக்கு அறிவித்ததன் பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவதாகவும் சபாநாயகர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

—————-

ஜனாதிபதியுடன் இடம்பெற உள்ள கலந்துரையாடலில் மக்கள் விடுதலை முன்னணியினரும் கலந்து கொள்ளப்போவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

—————

தற்போது பாராளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உயிரிழப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த நிலமைக்கு சபாநாயகரே முக்கிய காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று (17) அங்குனகொலபெலஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்​கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சரவையை அல்லது பிரதமரை நியமிக்கவோ அரசாங்கத்தை கலைக்கவோ சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை எனவும் அரசியலமைப்பின் அடிப்படையில் ஜனாதிபதிக்கே அதற்கான அதிகாரம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் என்பவர் நடுநிலையானவராகவும் பக்கச்சார்பற்றவராகவும் இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியின் தீர்மானங்களை அவரால் விமர்சிக்க முடியாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

——————

Related posts