தொலைக்காட்சி கோபுரத்தின் மீது ரஷ்யா தாக்குதல் – 5 பேர் பலி

ரஷ்ய தலைநகர் கிய்வில் உள்ள தொலைக்காட்சி கோபுரத்தின் மீது ரஷ்யா மேற்கொண்ட விமான தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
உக்ரைன் அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இன்று நடைபெற்ற 6-வது நாள் போரில் அரசு கட்டிடங்கள் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகின்றது.
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்கிவ்வின் மத்திய சதுக்கத்தின் மீது ரஷிய படைகள் குண்டு மழை பொழிந்தன. இதில், இந்தியாவை சேர்ந்த ஒரு மாணவர் பலியானார். மேலும், ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
கீவ் நகரில் உள்ள உளவுத்துறையின் கட்டிடத்தின் அருகே வசிக்கும் மக்கள் வெளியேறுமாறு ரஷியா அறிவுறுத்தியுள்ளது.
இந்தநிலையில், ரஷியா – உக்ரைன் இடையே நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக ரஷிய செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
பெலாரஸ் நாட்டில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படாத நிலையில் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

Related posts