” ஓ டியர் ” பாடல் வரும் 5ம் திகதி மத்தான வெளியீடு

ஒரு முழு நீள திரைப்படம் 4 நிமிட பாடலாக வெளி வருகிறது அதுதான் ஓ டியர் என்ற புதிய பாடல் முயற்சி..

இன்றைய பரபரப்பான உலகில் திரையரங்கிற்கு ரசிகரை அழைத்து காண்பிப்பது எத்தனை சிரமம்.. கொரோனா காலம் அல்லவா..

அதனால் திருக்குறள் போல ஒரு திரைப்படத்தை சுருக்கி தந்தால் எப்படியிருக்கும் அந்த முயற்சியில் உருவானதே இப்பாடல்..

டென்மார்க் அலைகள் மூவீஸ் உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தின் பின்னர் அதிக பொருட் செலவில் தயாரித்திருக்கும் பாடல் ஓ டியர்..

வஸந்த் செல்லத்துரையின் இசையில் நர்வினி எழுதிய இப் பாடல் மிகவும் பிரமாண்டமான முறையில் சர்வதேச தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

கொலிவுட் திரைப்படங்களில் பங்கேற்ற பிரபல கமேராமேன் இந்த பாடலின் படப்பிடிப்பை நடத்தியிருப்பது..

கிராபிக்ஸ் பணிகளில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் கலைஞர்கள் பங்கேற்றுள்ளது.. பாடல் பணிகள் சிங்கப்பூர் முதல் டென்மார்க் வரை மிக நுட்பமாக நடந்துள்ளமை.

இளமை முதுமை என்று பல பருவங்களை மாற்றும் கிரபிக்ஸ் காட்சிகள்..

பிரமாண்டமான அரங்க அமைப்புக்கள்..

எண்ணற்ற இளம் கலைஞர்களின் இணைந்த பெரு முயற்சி..

நம்மாலும் முடியும் என்பதை நிறுவவும், தமிழ் மக்களின் கலைப் பயணத்தில் புது நம்பிக்கை ஏற்படுத்தவும் அலைகள் மூவீஸ் தயாரித்த பல படைப்புக்களில் இது மிக முக்கியமானது.

திரைப்படம் ஏன் எடுக்கவில்லை என்று கேட்கிறார்கள், ஒரு திரைப்பட பட்ஜட் போல பெரும் தொகை பணம், பணியாளர், நெற்வேர்க், சர்வதேச தொழில் நுட்பம் என்று கவனத்தை கூர்மைப்படுத்தி இதை ஒரு சூப்பர் பாடலாக உலக ரசிகர்களுக்கு தரவுள்ளனர்..

ஒரு திரைப்படத்தை ஒரு சில நிமிடங்களுக்குள் சுருக்கி ஒரேயொரு பாடலாக உருவாக்கினால் எப்படியிருக்கும்.. இந்தப்பாடலும் முழு நீள சினிமா உணர்வையே தருவதாக கூறப்படுகிறது.

பிரபல இயக்குநர் ஒருவர் இழைதப் பார்த்த பின்னர் ஒரு சினிமா படத்தை பார்த்த முழுமையை அனுபவித்ததாகக் கூறியுள்ளமை இதற்கு உதாரணமாகும்.

திரைப்பட கலையின் உச்சங்களை செயல் முறையாலும், களப்பணியாலும், கல்வியாலும் தொட்ட இளைய தலைமுறை அறிஞர்களின் அரிய படைப்பு..

ஒவ்வொரு நகர்வும் எழுத்து, திட்டமிடல் என்று சர்வதேச தரத்தில் உருவாக்க வேண்டும் என்று அரும் பாடுபட்டு சமரசத்திற்கு இடமில்லாது எடுக்கப்பட்ட புது முயற்சி இது..

காணத் தயாராகுங்கள்…

நமது இலக்கு இனி இந்திய சினிமா அல்ல, அதற்கும் மேலே என்ற என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் கண்டிப்பாக தவற விடாதீர்கள்..

எழுந்து வா தமிழா..
நிமிர்ந்து வா தமிழா பாடலின் வெற்றிக்குப் பின்
வஸந்த் செல்லத்துரையின் இசை, நடிப்பு, எடிட்டிங், வர்ணக்கலவை என அவர் அனுபவம் பாடல் முழுவதும் மிளிர்கிறது.


அலைகள் 27.02.2022

Related posts