நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபட்ட சஜித்

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று (12) காலை வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகின்றார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பிறந்த தினமான இன்று காலை காலை 10 மணி அளவில் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வருகையால் நல்லூர் ஆலய சூழலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவின் பிறந்த தினம் இன்றாகும் (12).

1967 ஆம் ஆண்டு பிறந்த சஜித் பிரேமதாஸ இன்று தன்னுடைய 55 ஆவது அகவையில் கால்பதிக்கின்றார்.

2000 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து முதல் தடவையாக பாராளுமன்றத்திற்கு களமிறங்கி இதுவரையில் , சுகாதார பிரதி அமைச்சர், வீடமைப்பு அமைச்சர் போன்ற பதவிகளை வகித்து, முன்னைய பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியியில் அதிக எண்ணிக்கையில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவரானார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிட்டார் என்பதுவும் குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts