விஜய் ஆண்டனி விரக்தி ட்வீட்

கரோனா தொற்று பரவல் தொடர்பாக விஜய ஆண்டனி விரக்தியான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய மாநில அரசுகள் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. கரோனா வைரஸின் உருமாற்ற டெல்டா வைரஸ் பரவுவதோடு, ஒமைக்ரான் வைரஸ் பரவலும் அதிகரித்து வருகிறது. நாட்டில் பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகளில் 50 % வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவிருந்த ‘ஆர்ஆர்ஆர்’, ‘வலிமை’, ‘ராதே ஷ்யாம்’ உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்கள் பலவும் பின்வாங்கி விட்டன.
இந்நிலையில் கரோனா தொற்று பரவல் தொடர்பாக நடிகரும் இசையமைப்பாளருமான விஜய ஆண்டனி விரக்தியான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் “கரோனா பணக்காரனை பெரிய பணக்காரனாகவும், எழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும். எவனாவது ஹிரோஷிமா நாகசாகில போட்ட மாதிரி, உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிச்சுட்டா நல்லா இருக்கும். வாழ்க வளமுடன்” என்று கூறியுள்ளார்.
தற்போது விஜய் ஆண்டனி நடிக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற படத்தை விஜய் மில்டன் எழுதி, இயக்குகிறார். ‘சலீம்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் இப்படத்தை 2022ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

Related posts