குஷிநகர் சர்வதேச விமான நிலையம் இன்று

குஷிநகர் சர்வதேச விமான நிலையம் இன்று (20) இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 29ஆவது சர்வதேச விமான நிலையமான, உத்தர பிரதேச மாநிலம் குஷிநகர் சர்வதேச விமான நிலையம், ரூ. 260 கோடி இந்திய ரூபா செலவில் நிர்மாணிக்ப்பட்டுள்ளது.

த்தபிரான் பரிநிர்வாணமடைந்த இடத்தைப் பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச யாத்ரீகர்களுக்கு வசதியாக இது அமைவதுடன், உலகெங்கும் உள்ள புத்தரின் யாத்திரைத் தலங்களை இணைக்கும் வகையிலும் செயல்படும்.

குஷிநகர் சர்வதேச விமான நிலையத் திறப்பு விழாவைக் குறிக்கும் வகையில், இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சென்ற ஶ்ரீ லங்கன் விமான சேவைக்குரிய விமானம் முதலில் தரையிறங்கியுள்ளது. இவ்விமானத்தில் இலங்கையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட புத்த துறவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அடங்கிய குழுவினர் வருகை தர உள்ளனர்.

இதில் புத்தமதக் கொள்கைகளைப் பரப்பும் 12 பேர் இடம் பெற்றிருப்பதுடன், புத்தரின் புனித நூல்களையும், குஷிநகரில் காட்சிப்படுத்துவற்காக எடுத்து செல்லப்பட்டுள்ளது. இந்த பிரதிநிதிகள் குழுவில், இலங்கை புத்த மதத்தின் நான்கு பிரிவுகளான அஸ்கிரிய, அமரபுர, ராமன்ய, மல்வத்த ஆகிய நிகாயக்களைச் (பிரிவுகளை) சேர்ந்த அனுநாயக்கர்கள் (துணைத்தலைவர்கள்) மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் ஐந்து அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இன்று மு.ப. 11.30 மணியளவில் அபிதம்ம தினத்தையொட்டி பரிநிர்வாண விகாரையில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார். அதன் பின், சுமார் குஷிநகரில் நடைபெறும் விழாவில் பங்கேற்று, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நடப்படவுள்ளது.

அஜந்தா ஓவியங்களின் கண்காட்சியை பார்வையிடும் பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் வத்நகர் மற்றும் பிற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட புத்த கைவினைப் பொருட்கள், புத்த சூத்திரங்களின் கையெழுத்துப் பிரதியையும் பார்வையிட உள்ளார்.

Related posts