அட்லி வெறுப்பாளர்களுக்கு ப்ரியாவின் பதில்

அட்லியின் வெறுப்பாளர்களுக்கு அவரது மனைவி ப்ரியா இன்ஸ்டாகிராமில் பதில் அளித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் அட்லி. தற்போது இந்தியில் ஷாரூக் கான் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார். இதன் மூலம் இந்தியிலும் அறிமுகமாகவுள்ளார். இந்தப் படத்தின் டெஸ்ட் ஷூட் முடிவடைந்துவிட்டாலும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் எனத் தெரிகிறது.
சமூக வலைதளத்தைப் பொறுத்தவரையில் எப்போதுமே அட்லியைப் பாராட்டுபவர்களை விட, கிண்டல் செய்பவர்களே அதிகம். பழைய படங்களின் கதைக்களங்களை வைத்தே படங்களை இயக்கி வருகிறார் என்று தொடர்ச்சியாக விமர்சிக்கப்படுபவர் அட்லி.
தற்போது அட்லியை வெறுப்பவர்களுக்கு அவரது மனைவி ப்ரியா அட்லி பதிலளித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார் ப்ரியா அட்லி. அப்போது ரசிகர் ஒருவர், “அட்லி வெறுப்பாளர்களைப் பற்றியும் உங்களைப் பற்றியும் நீங்கள் சொல்ல விரும்புவது எது?” என்ற கேள்வியை முன்வைத்தார்.
அவருக்கு பதிலளிக்கும் விதமாக ப்ரியா அட்லி, “எங்கள் மீது இன்னும் அதிகமாக அன்பு செலுத்துவதற்கு நன்றி. அன்பைப் பரப்புவோம்” என்று தெரிவித்துள்ளார்.

Related posts