ப்ளூ சட்டை மாறனின் ‘ஆன்டி இண்டியன்’ படத்துக்குத் தடை

ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆன்டி இண்டியன்' படத்துக்குத் தணிக்கை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் யூடியூப் தளத்தில் பலரும் விமர்சகர்களாக வலம் வருகிறார்கள். இதில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்கள் வெகு சிலர்தான். அதில் முக்கியமானவர் ப்ளூ சட்டை மாறன். இவர் அனைத்துப் பட விமர்சனங்களையும் ப்ளூ சட்டை அணிந்துகொண்டே செய்வதால், அவரை ப்ளூ சட்டை மாறன் என்றே அழைத்து வருகிறார்கள். அவர் இயக்குநராக ஒரு படத்தை இயக்கி முடித்துள்ளார். முழுக்க புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. அனைத்துப் பணிகளும் முடிந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. 'ஆன்டி இண்டியன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஏப்ரல் 5-ம் தேதி தணிக்கை அதிகாரிகள் பார்த்தனர். இந்தப் படத்தை முழுமையாக நிராகரித்து தடை விதித்துள்ளனர். அடிப்படையிலேயே…

புராண கதையில் நடிக்க சம்பளத்தை குறைத்த நடிகை சமந்தா

சகுந்தலை புராண கதை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தில் சகுந்தலையாக சமந்தா நடிக்கிறார். விசுவாமித்திர முனிவருக்கும் மேனகைக்கும் பிறந்த சகுந்தலைக்கும் துஷ்யந்த மன்னனுக்கும் காதல் மலர்கிறது. துருவாச முனிவர் சாபத்தினால் அந்த காதலை துஷ்யந்தன் மறக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. பல கஷ்டங்களை தாண்டி இருவரும் எப்படி இணைகிறார்கள் என்பது கதை. இந்த படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது. குணசேகர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ருத்ரமா தேவி படத்தை டைரக்டு செய்தவர். சகுந்தலை படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா, பூஜா ஹெக்டே ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் சமந்தாவை தேர்வு செய்தனர். இந்த படத்தில் நடிக்க சமந்தா ரூ.2.50 கோடி சம்பளம் வாங்குகிறார். இதற்கு முன்பு ரூ.3 கோடி வாங்கிய சமந்தா சகுந்தலை படத்தில் தனது கதாபாத்திரம்…

சினிமா போக்கை மாற்றிய நடிகைகள்

தமிழில் மாநகரம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயமேன், மிஸ்டர் சந்திரமவுலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரெஜினா கசேண்ட்ரா தற்போது பார்ட்டி, கள்ளபாட், கசட தபற போன்ற படங்களில் நடித்து வருகிறார். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:- 'நான் சினிமாவில் புதுமையான முயற்சிகள் எடுக்கிறேன். எனக்கு படங்களின் எண்ணிக்கையை கூட்ட வேண்டும் என்ற எண்ணம் இல்லை. வருகிற படங்களையெல்லாம் ஒப்புக்கொள் ஒரு ஆண்டுக்கு ஐந்தாறு படங்களில் நடி என்று ஆலோசனை சொல்பவர்கள் இருக்கிறார்கள். அதை ஏற்க மாட்டேன். நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன். சினிமா துறையில் நான் வந்தபோது இருந்ததை விட இப்போது நல்ல மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. தென்னிந்திய திரையுலகில் சிறிய பெரிய நடிகர்கள் வித்தியாசம் பார்க்காமல் சேர்ந்து பழகுவது எனக்கு பிடித்துள்ளது. பெரிய…

‘விக்ரம்’ படத்தில் கமலுக்கு வில்லனாக பகத் பாசில்?

தேர்தல் முடிந்துள்ளதால் கமல்ஹாசன் புதிய படத்தில் நடிக்க தயாராகிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இவர் மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை டைரக்டு செய்து பிரபலமானவர். படத்துக்கு விக்ரம் என்று பெயர் வைத்துள்ளனர். படத்தில் நடிக்கும் இதர நடிகர் நடிகை தேர்வு நடக்கிறது. இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிக்க ராகவா லாரன்சிடம் ஏற்கனவே பேசி வந்தனர். இந்த நிலையில் பகத் பாசிலும் படத்தில் இணைந்துள்ளதால் அவர் வில்லனாக நடிப்பாரா அல்லது வேறு கதாபாத்திரமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தில் பகத் பாசில் வில்லனாக நடித்து இருந்தார். தெலுங்கு படமொன்றிலும் வில்லனாக வருகிறார். எனவே விக்ரம் படத்திலும் கமலுக்கு அவர் வில்லனாக…

தடுப்பூசி 2 டோஸ் போட்ட பிறகும் கொரோனா பாதிப்பு

கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்ட திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள துரைமுருகன், ஏற்கனவே கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளார்.