இந்தியாவில் 59,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 59,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில் அதிக கொரோனா பாதிப்புகளை சந்தித்த நாடுகளில் ஒன்றாக இருந்த இந்தியாவில் 10 ஆயிரத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்ட தினசரி கொரோனா பாதிப்பு, இந்த மாதத்தில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 59,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,18,46,652 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 257 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,60,949 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 32,987 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,12,64,637 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 4,21,066 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 5,55,04,440 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

——

முகக்கவசம் அணியும் பழக்கத்தை மக்கள் மறந்து விடக் கூடாது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பொதுமக்கள் முகக்கவசம் அணியாததால் தான் கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம். முகக்கவசம் அணியும் பழக்கத்தை மக்கள் மறந்து விடக் கூடாது. அதனை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இரட்டை உருமாறிய கொரோனா இதுவரை தமிழகத்தில் கண்டறியப்படவில்லை.

தமிழகத்தில் கொரோனா அதிகரிப்புக்கு வெளிநாட்டு கொரோனா காரணம் இல்லை. அறிகுறி இருந்தால் சுய மருத்துவம்செய்யாமல் மருத்துவமனையை அணுக வேண்டும்.

தமிழகத்தில் பரிசோதனை அதிகரிக்க உள்ளதால், தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டக்கூடும். தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. படிப்படியாக கொரோனாவை குறைப்பது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்.

இதுவரை 25 லட்சம் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. ஏப்., முதல் வாரத்தில் 10 லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளன. தமிழகத்தில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்ட 15 பேரும் குணமடைந்து விட்டனர்.

Related posts