தமிழ்த் திரையுலகில் மீண்டும் ஒரு ‘ஸ்டிரைக்’?

தமிழ்த் திரையுலகில் மீண்டும் ஒரு ஸ்டிரைக் வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. கரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வந்து திரையரங்குகள் திறந்தவுடன், தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் கடும் பனிப்போர் நடைபெற்று வருகிறது. படங்களை ஓடிடி தளத்தில் வெளியிடுவது தொடர்பாகத் தொடர்ச்சியாக பல்வேறு கருத்துகள் இரு தரப்பிலும் பகிரப்பட்டு வருகின்றன. 30 நாட்களுக்குப் பிறகே ஓடிடி தளத்தில் வெளியிடுவோம் என்ற கடிதம் கொடுத்தால் மட்டுமே, திரையரங்குகள் ஒதுக்குவோம் எனத் திரையரங்கு உரிமையாளர்கள் முடிவுடன் இருக்கிறார்கள். இதற்குத் தயாரிப்பாளர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். இந்தப் பிரச்சினை தொடர்பாக முன்னணித் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் இருவருக்கும் இடையே சில தினங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது தயாரிப்பாளர்கள் வி.பி.எஃப் கட்டணம் கட்ட முடியாது மற்றும் 30 நாட்களுக்குப் பிறகுதான் ஓடிடியில் வெளியிடுவோம் என்ற கடிதம் கொடுக்க இயலாது எனத்…

டெடி’ அப்டேட்: ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு

டெடி' திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ஆர்யா நடிப்பில் சக்தி செளந்தர்ராஜன் இயக்கியுள்ள படம் ‘டெடி’. திருமணத்துக்குப் பிறகு ஆர்யா - சயீஷா ஜோடியாக நடித்துள்ள முதல் படம் இது. இயக்குநர் மகிழ் திருமேனி, கருணாகரன், சதீஷ், சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளும் முடிந்துவிட்டன. கரோனா அச்சுறுத்தலினால் வெளியாகாமல் இருந்தது. ஊரடங்கு சமயத்தில் ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், திரையரங்குகள் திறக்கப்பட்டதால் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது ஹாட் ஸ்டார் ஓடிடி தளம் பெரும் விலை கொடுத்து 'டெடி' படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் மார்ச் 12-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் படம் வெளியாகும் எனப் படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். தற்போது ஆர்யா…

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு அழுத்தங்களை..

அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களுக்கு அரசு ஏற்கனவே பதிலளித்துள்ளது ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் 46ஆவது அமர்வு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நேற்று ஆரம்பமானது. இந்த அமர்வு எதிர்வரும் மார்ச் 23ம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில் நாளை 24ம் திகதி வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இணையத்தள மூலம் மனித உரிமை பேரவை அமர்வில் உரையாற்றவுள்ளார். அது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்: இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள அனைத்து நடவடிக்ைககளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவையின் அறிக்கை தொடர்பில் இலங்கை சார்பான பதிலை நாம் ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளோம். இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. அதற்கு நாம் வெற்றிகரமாக முகம் கொடுப்போம். இலங்கைக்கு ஆதரவு வழங்கும் நாடுகளோடு இணைந்து நாம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு…

மனித உரிமைகள்தான் நாம் வாழ்வதற்கான வழி

மனித உரிமைகள் தான் நாம் வாழ்வதற்கான வழியாகும். அதனூடாகவே தேவையற்ற பதற்றங்களைத் தணிக்க முடிவதுடன் நிலைபேறான அமைதியையும் அடைந்துகொள்ள முடியும். எனவே மனித உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அதுவே அனைவருக்கும் சமத்துவமானதும் கண்ணியமானதுமான உலகத்தைக் கட்டியெழுப்புவதற்கான வழியாகும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் நேற்று ஜெனிவாவில் ஆரம்பமாகிய நிலையில் அதில் ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தனது உரையில் மேலும் கூறியிருப்பதாவது, மனித உரிமைகள் மிகவும் முக்கியமானவை என்பதுடன் அவை எம்மை பிறருடன் சம அளவில் இணைக்கின்றது. மனித உரிமைகள் தான் நாம் வாழ்வதற்கான வழியாகும். அதனூடாகவே தேவையற்ற பதற்றங்களைத் தணிக்க முடிவதுடன் நிலைபேறான அமைதியையும் அடைந்துகொள்ள முடியும்.…

பிரபாகரனின் காணொளியை டிக் டொக்கில் பதிவேற்றிய இளைஞன் கைது

விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் காணொளியொன்றினை ´டிக் டொக்´ சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய நபரொவர் கைது செய்யப்பட்டுள்ளாார். வத்தளை பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யபபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். 25 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுளளதாக அவர் மேலும் தெரிவித்தார். முல்லைத்தீவு பிரதேசத்தை சேர்ந்த குறித்த இளைஞன் பின்னர் ஹட்டனில் வசித்து வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அவரின் கைப்பேசியயை சோதனையிட்டதில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பல்வேறு செய்திகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. --- வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடி வந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று மரணமடைந்துள்ளார். வவுனியா மறவன்குளம் பகுதியை சேர்ந்த தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி வயது 61என்ற தாயே நேற்றையதினம் மரணமடைந்துள்ளார். இவரது…