பொறுப்புடன் டுவிட் செய்யுங்கள் பிரபலங்களுக்கு இந்தியா

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் சர்வதேச பிரபலங்களை பொறுப்புடன் டுவிட் செய்யுங்கள் என இந்தியா கேட்டுள்ளது.

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, டெல்லியை முற்றுகையிட்டு வட மாநில விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படவிலை

குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தியபோது வன்முறை வெடித்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே விவசாயிகள் மீண்டும் 6-ந் தேதி தேசிய, மாநில நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதையொட்டி, டெல்லி எல்லைகளுக்கு விவசாயிகள் அதிக அளவில் வருவதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் சர்வதேச பிரபலங்கள் பலரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக டுவிட்டரில் பதிவிட்டனர்.டுவிட்டரில் விவசாயிகளுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தியவர்களில் பாப் நட்சத்திரம் ரிஹானா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் மற்றும் அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸின் வழக்கறிஞர் மருமகள் மீனா ஹாரிஸ் ஆகியோரும் அடங்குவர்.

அமெரிக்க பாடகி ரிஹானா, விவசாயிகளின் போராட்டம் பற்றிய செய்தியை பகிர்ந்து, ‘ஏன் இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதேபோல், சூழலியல் போராளியான சுவீடன் நாட்டை சேர்ந்த 18 வயதான கிரேட்டா தன்பெர்க், ‘போராடி வரும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்போம்’ என பதிவிட்டார்.

இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டங்களை ஆதரிக்கும் வெளிநாட்டு பிரபலங்களை பொறுப்புடன் டுவீட் செய்யுங்கள் என இந்தியா கூறி உள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இது இந்தியாவிற்கும் எல்லா இடங்களிலும் நாகரீக சமுதாயத்திற்கும் மிகவும் கவலை அளிக்கிறது. இந்திய போலீஸ் படைகள் இந்த ஆர்ப்பாட்டங்களை மிகுந்த கட்டுப்பாட்டுடன் கையாண்டுள்ளன.

காவல்துறையில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் உடல் ரீதியாக தாக்கப்பட்டுள்ளனர், சில சந்தர்ப்பங்களில் பலத்த காயமடைந்தனர்” விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவிப்பதற்கு முன்பாக இந்த விவகாரத்தை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் . இந்தியாவில் நடைபெறும் இந்த போராட்டம் இந்தியாவின் உள்விவகாரம் சார்ந்தது .

இந்த போராட்டத்தின் மூலம், சில குழுக்கள், இந்தியாவிற்கு எதிராக, சர்வதேச ஆதரவை பெற முயற்சிக்கின்றன. சில குழுக்கள் தங்களது கருத்துகளை விவசாயப் போராட்டத்தில் திணித்து விவசாயிகளை திசை திருப்ப முயற்சிக்கின்றன.

இந்தியாவில் சிறிய அளவிலான விவசாயிகளே வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருகின்றனர்.

போராட்டக்காரர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இந்திய அரசு அவர்களின் பிரதிநிதிகளுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது. மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தைகளில் ஒரு பகுதியாக இருந்துள்ளனர், மேலும் பதினொரு சுற்று பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன. சட்டங்களை நிறுத்தி வைக்க அரசாங்கம் கூட முன்வந்துள்ளது .

ஆயினும்கூட, இந்த ஆர்ப்பாட்டங்களில் தங்கள் நிகழ்ச்சி நிரலை அமல்படுத்த முனைவோர் குறித்து கண்டறிவது துரதிர்ஷ்டவசமானது. இது இந்திய குடியரசு தினமான ஜனவரி 26 அன்று மிகவும் சாட்சியாக இருந்தது. ஒரு நேசத்துக்குரிய தேசிய நினைவு நாள், அரசியலமைப்பின் தொடக்க ஆண்டு நிறைவு நாள் இந்தியா, மோசமானதாக இருந்தது, வன்முறை மற்றும் காழ்ப்புணர்ச்சி இந்திய தலைநகரில் நடந்தது என கூறி உள்ளது.

Related posts