இளையராஜாவுடன் வெற்றிமாறன் கூட்டணி?

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கவுள்ள படத்துக்கு இளையராஜா இசையமைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
‘அசுரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, சூரி நடிக்கும் படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளது உறுதியாகிவிட்டது. இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. வெற்றிமாறன் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் தொடங்கவுள்ளது.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிக்கவுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் பாரதிராஜா முதன்முறையாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் சத்தியமங்கலம் காட்டுப் பகுதிகளிலேயே முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
இப்படத்தின் இசைக்காக முதன்முறையாக இளையராஜாவுடன் வெற்றிமாறன் கைகோர்க்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘வடசென்னை’ படம் தவிர்த்து, வெற்றிமாறன் இயக்கிய அனைத்து படங்களுக்குமே ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைத்து வந்தார். வெற்றிமாறன் – இளையராஜா முதன்முறையாக இணைந்து பணிபுரியவுள்ளதால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
சூரி படத்தை முடித்துவிட்டு, தனுஷ் நடிக்கவுள்ள படத்துக்கான பணிகளை வெற்றிமாறன் தொடங்குவார் எனத் தெரிகி

Related posts