விமான நிலையத்தை திறப்பது தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து சுற்றுலா தொழில் துறையை முன்னெடுப்பதற்காக விமான நிலையத்தை திறப்பது தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று நேற்று (3) சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியாரச்சி, ஆரம்ப சுகாதார சேவைகள் தொற்றுநோய் மற்றும் COVID-19 நோயை கட்டுப்படுத்தும் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்சனி பெர்னாண்டோ புள்ளே மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோரின் பங்களிப்புடன் சுகாதார அமைச்சில் நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் தொற்றுநோயியல் பிரிவின் தலைமை அதிகாரி உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள், விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம், சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ஹோட்டல் துறையைச் சேர்ந்தோர், சுற்றுலா துறை அமைச்சின் முக்கிய அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இதன்போது சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக விமான நிலையத்தை திறந்து, சுற்றுலா தொழில்துறையை மேம்படுத்துவதற்கு தேவையான சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளை தயாரிப்பதற்கான ஆரம்பத் திட்டத்தை வகுப்பதற்காக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சுற்றுலா அமைச்சு, சுற்றுலாத் துறையை சேர்ந்த பிரதிநிதிகளைக் கொண்ட இணைப்புக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

இந்த குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக சுற்றுலாப்பயணிகளை நாட்டுக்கு அழைப்பது தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

Related posts