முரளிதரன் படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகுவாரா?

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து 800 என்ற பெயரில் தயாராகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து 800 என்ற பெயரில் தயாராகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. ‘ஷேம் ஆன் விஜய் சேதுபதி’ என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது. டாக்டர் ராமதாஸ், வைகோ, சீமான், பாரதிராஜா, சீனுராமசாமி, சேரன், தாமரை உள்ளிட்ட பலர் 800 படத்தில் இருந்து விலகும்படி விஜய்சேதுபதியை வற்புறுத்தி உள்ளனர்.

கவிஞர் வைரமுத்து டுவிட்டரில், “கலையாளர் விஜய் சேதுபதிக்கு, சில நேரங்களில் செய்து எய்தும் புகழைவிட செய்யாமல் எய்தும் புகழே பெரிதினும் பெரிது செய்யும். நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள். வளர்பிறையில் கறை எதற்கு? இன உரிமைக்காக கலை உரிமையை விட்டு கொடுப்பதே விவேகம். நீங்கள் விவேகி” என்று என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் படத்தில், இளம் வயது முரளிதரனாக நடிக்க டி.ஜே அருணாச்சலம் மறுத்துள்ளார். இவர் அசுரன் படத்தில் தனுஷ் மகனாக நடித்தவர். அவர் கூறும்போது, “800 படத்தின் இயக்குனர் அழைத்து சிறுவயது முரளிதரனாக நடிக்கும்படி சொன்னார். படத்தில் ஈழத்தமிழரின் போர் விவரங்கள் இருக்கிறதா, இல்லையா என்பது தெரியவில்லை.

ஆனால் என் அம்மா, ஈழத்தைச் சேர்ந்தவர். தமிழீழப் போரில் ஏராளமான கொடூரங்கள் நடந்தன. அதனால் இந்தப் படத்தால் நடிக்க மறுத்து விட்டேன்” என்றார். படத்தில் எதிர்ப்பை மீறி நடிப்பதா அல்லது விலகுவதா என்று நெருக்கமானவர்களுடன் விஜய்சேதுபதி ஆலோசிப்பதாகவும் இதுகுறித்து தனது இறுதிமுடிவை விரைவில் அறிவிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Related posts