விசாரணைகளை துரிதப்படுத்த பொலிஸ் குழுக்களுக்கு பணிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றம் சம்சுதீன் மொஹமட் யாசீன் ஆகியோருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலில், வாக்காளர்களுக்கு போக்குவரத்து வழங்கியமை, அதற்காக அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டு தொடர்பில், அப்போதைய கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அப்போதைய மீள்குடியேற்ற திட்ட பணிப்பாளர் சம்சுதீன் மொஹமட் யாசீன், மீள்குடியேற்ற திட்ட முன்னாள் கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சன் ஆகிய மூன்று பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர்களில் கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சன் கைது செய்யப்பட்டு, ஒக்டோபர் 26ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 222 பஸ்கள் மூலம் இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் வாக்காளர்களை வாக்களிப்பதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்டுத்திக் கொடுத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு சொந்தமான ரூபா 95 இலட்சத்திற்கும் அதிகமான நிதியை முறைகேடாக பயன்பத்தியதற்கு அமைய, பொதுச் சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில், 1981ஆம் ஆண்டு இலக்கம் 15 ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் 82 (1) பிரிவுக்கு அமைய, அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ரிசாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜை விடுதலை செய்தது தொடர்பான விசாரணைகளை, துரிதப்படுத்துமாறு விசாரணைகளை முன்னெடுக்கும் இரு பொலிஸ் குழுக்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கமைய 07 விசேட அம்சங்கள் தொடர்பில், இரு குழுக்களும் விசாரணை நடத்துவதோடு உள்ளக விசாரணையொன்றும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (14) நடைபெற்ற விசேட ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விடயங்கள், சட்டவிரோத பணப்பரிமாற்றம், பயங்கரவாதிகளுக்கு பணம் வழங்குதல் உட்பட 07 அம்சங்களின் அடிப்படையில், விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்ட மாஅதிபரினால் பதில் பொலிஸ் மாஅதிபருக்கு அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி கைதான ரியாஜ் ஜந்தரை மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஜனாதிபதியினதும் பாதுகாப்பு செயலாளரினதும் கவனத்திற்கும் இது, கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், சட்ட மாஅதிபரின் ஆலோசனைப்படி சி.ஐ.டி பிரதிப் பொலிஸ் மாஅதிபரின் கண்காணிப்பின் கீழ், இரு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், ஒரு பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் 60 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. 04 அம்சங்களின் அடிப்படையில் ஒரு குழுவும் 03 அம்சங்களின் அடிப்படையில் மற்றொரு குழுவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவை வழங்குமாறு, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அவர் சார்பில் அவரது சட்டத்தரணியினால் குறித்த ரிட் மனு (writ petition) தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலில், வாக்காளர்களுக்கு போக்குவரத்து வழங்கியமை, அதற்காக அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டு தொடர்பில், அப்போதைய கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அப்போதைய மீள்குடியேற்ற திட்ட பணிப்பாளர் சம்சுதீன் மொஹமட் யாசீன், மீள்குடியேற்ற திட்ட முன்னாள் கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சன் ஆகிய மூன்று பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவர்களில் கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சன் கைது செய்யப்பட்டு, நேற்றையதினம் (14) அவரை ஒக்டோபர் 26ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு, கொழும்பு கோட்டை நீதவானினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், CIDயினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க ரிஷாட் பதியுதீன் மற்றும் சம்சுதீன் மொஹமட் யாசீனுக்கு நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்திற்கு சொந்தமான ரூபா 95 இலட்சத்திற்கும் அதிகமான நிதியை முறைகேடாக பயன்பத்தியதற்கு அமைய, பொதுச் சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில், 1981ஆம் ஆண்டு இலக்கம் 15 ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் 82 (1) பிரிவுக்கு அமைய, அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Related posts