உலக கை கழுவுதல் தினமான இன்று..

உலக கை கழுவுதல் தினமான இன்று, வைரஸ் மற்றும் பாக்டீரியா பாதிப்பிலிருந்து முழுமையான பாதுகாப்பு தரும் Cinthol Health + Handwash பயன்படுத்தலாம் என்றும், இது 99.9% கிருமிகளை கொல்கிறது என்றும் Cinthol நிறுவன நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:-

கை கழுவுதலின் அவசியம் : ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15-ந்தேதி (இன்று) கை கழுவும் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. கைகளை அடிக்கடி கழுவ வேண்டும், அதுவும் கைகளை சுத்தமாகக் கழுவுதல் மிக முக்கியம் என்பதை இந்த நாள் நமக்கு நினைவூட்டுவதாக அமைகிறது. ஒரு நல்ல பழக்க வழக்கத்தை கடைபிடிக்க இந்த நாள் வருடாந்திர நினைவூட்டலாக இருந்தாலும், இந்த ஆண்டு covid-19 எனப்படும் கொரோனா வைரஸ் காரணமாக கை கழுவும் பழக்கம் ஒரு உயிர் காக்கும் காரணியாக மாறியிருப்பதை நிச்சயமாக மறுக்கவே முடியாது. இப்போதைய சூழலில் கை கழுவும் பழக்கம் உயிர் காக்கும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் எனும் உலகளாவிய தொற்றுநோய் நமது கைகளை கழுவுவது மட்டுமன்றி, எவ்வாறு கைகளை கழுவ வேண்டும்? எப்போதெல்லாம் கைகளை கழுவ வேண்டும்? போன்றவற்றையும் அழுத்தந்திருத்தமாக நமக்கு கற்றுத் தந்திருக்கிறது. அதாவது உணவு தயாரிக்கும் முன்பும், தயாரித்த பின்பும், சாப்பிட்ட பின்பும், கழிவறை-குளியலறை பயன்படுத்திய பின்பும், வெளியே ஏதாவது ஒரு இடத்துக்கு சென்று வந்த பின்பும், லிப்ட், கதவுகள் போன்றவற்றை தொட்டு பயன்படுத்திய பிறகும், ஏதேனும் பார்சல் உள்ளிட்ட எந்த பொருளையும் தொட்ட பிறகும் நிச்சயமாக நாம் கைகளை சுத்தமாகக் கழுவுதல் என்பது அவசியமானதாகும்.

கைகளையும் சரியான வழியில் கழுவுதல் முக்கியமாகும். கை கழுவுதல் என்பது 5 நிலைகளைக் கொண்டதாகும். விரல்களிடையே நன்றாக தேய்த்தல், உள்ளங்கை மற்றும் கைகளின் பின்புறத்தில் நன்றாக தேய்த்தல், நகங்களின் இடுக்குகளில் உள்ள அழுக்குகளை நீக்குதல், இறுதியாக நீர் கொண்டு குறைந்தது 20 வினாடிகள் வரை கைகளை கழுவுதல் என முறைப்படி கைகளை கழுவ வேண்டும்.

இப்படி கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) வலியுறுத்தி வருகிறது. கை கழுவ பயன்படுத்தும் காரணியாக பொதுமக்கள் பெரிதும் விரும்புவது, Cinthol Health + Handwash ஆக இருக்கிறது. Cinthol Health + Handwash கைகளில் தங்கியுள்ள 99.9% கிருமிகளை அழித்து, வைரஸ்-பாக்டீரியாவிடம் இருந்து முழு பாதுகாப்பு தருகிறது. இனிமையான நறுமணத்தை தருவதுடன், நமது உடலுக்கு புத்துணர்ச்சி தருகிறது. கைகளை ஈரப்பதமாக்கி கிருமிகளை அழிப்பதுடன் சருமத்தில் மென்மைப் போக்கை கடைபிடிக்கிறது. அதாவது சருமத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது.

கொரோனா வைரஸ்-க்கு எதிரான போராட்டம்
ஒட்டுமொத்தமாக நுண் கிருமிகளிடமிருந்து முழு பாதுகாப்பிற்கு Cinthol Health + Handwash அடிக்கடி பயன்படுத்துவது மிகச் சிறந்த வழி என பொதுமக்கள் நம்புகிறார்கள்.

கொரோனா வைரஸ் எனும் பெரும் தொற்று நோய், கை கழுவுவது எவ்வளவு முக்கியமானது? என்பதை பொதுமக்களுக்கு உணர்த்தி இருக்கிறது. அதன்படி இந்த ஆண்டு உலக கை கழுவும் தின கருப்பொருளாக, ‘ அனைவருக்கும் கை சுத்தம் (Hand Hygiene for All)’, என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய மற்றும் நாளைய நல்வாழ்வுக்காக அனைத்து தரப்பு மக்களும் கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதும், அடிக்கடி கைகளை சுத்தமாக பராமரித்து கொள்வதும் அவசியமாகிறது. கொரோனா வைரஸ்-க்கு எதிரான ஒரு போராட்டத்தில் நமது கை கழுவும் பழக்கம் என்பது மிகப்பெரிய உயிர்காக்கும் காரணியாக பார்க்கப்படுகிறது. கை கழுவும் பழக்கம் என்பது நமது அன்றாட வாழ்வில் பழக்கமாகி விட்ட விஷயம் ஆகியிருக்கிறது. நோய்களில் இருந்து முழு பாதுகாப்பு தரும் Cinthol Health + Handwash உடன் அது சாத்தியம் ஆகட்டும். கை கழுவும் பழக்கம் மூலமாக எந்த நோயும் நம்மை தாக்காமல் பார்த்துக் கொள்வது நமது முக்கிய கடமையாக அமைந்துள்ளது, என Cinthol நிறுவன நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts