பத்து மடங்கு அதிகம் பரவும் தன்மை உடைய புதிய கொரோனா !

பத்து மடங்கு அதிகம் பரவும் தன்மை உடைய வைரசாக கொரோனாவைரஸ் புதிய மரபணு மாற்றம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பத்து மடங்கு அதிக தொற்றும் தன்மை உடைய கொரோனா வைரஸ் மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா வைரசின் மரபணு மாற்றத்தால் உருவாகியுள்ள இந்த வைரசுக்கு டி614டி என்று பெயரிடப்பட்டுள்ளது.

மலேசியாவில் 45 பேர் அடங்கிய குழு ஒன்றிடம் நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் 3 பேரிடம் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து மலேசியா திரும்பி 14 நாட்கள் தனிமை படுத்துதல் விதியை மீறி வெளியில் நடமாடிய உணவக உரிமையாளர் ஒருவரிடம் இருந்து இந்த வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.

கொரோனாவைரஸ் புதிய மரபணு மாற்றம் எடுத்துள்ளதால் இப்போது நடக்கும் தடுப்பூசி ஆய்வுகள் பலனளிக்காது என மலேசிய பொது சுகாதார இயக்குநர் அச்சம் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் இது போன்ற வைரஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அதிகம் காணப்படுவதாகவும், இதனால் நோய் தொற்றின் தீவிரம் அதிகரிக்காது என்றும் உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Related posts