தலைவர் நானே; உறுப்பினர்களுக்கு அறிவித்தார் ரணில்

மாகாண சபைத் தேர்தல் முடிவடைந்த பின்னரே கட்சி தலைமைப் பதவியில் இருந்து விலகுவேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட உறுப்பினர்களுக்கும், கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் சிறிகொத்தவில் நடைபெற்றது.இதன் போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு அறிவித்துள்ளார்.

—–

மீரிகமவில் 16 வயதுச் சிறுவன் ஒருவன் கண் பார்வையை இழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக, மீரிகம ஆதார வைத்தியசாலையை சேர்ந்த வைத்திய நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை அரசாங்கம் நியமித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 04ஆம் திகதி மீரிகம வைத்தியசாலையிலிருந்து தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட மருந்துகளை உட்கொண்ட பின்னர், குறித்த சிறுவன் பார்வையை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த ஏப்ரல் 03ஆம் திகதி மீரிகம வைத்தியசாலைக்கு நரம்பு சம்பந்தமான சிகிச்சையொன்றுக்காக சென்றிருந்ததாகவும், அவ்வேளையில் கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்ததால், அவரது மருந்துகளை குறித்த வைத்தியசாலையானது தபால் மூலமாக அனுப்பியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பரிந்துரைக்கப்பட்ட குறித்த மருந்துகளை உட்கொண்டு 14 நாட்களின் பின்னர் அச்சிறுவன் பார்வையை இழந்துள்ளதாக, பெற்றோர் தெரிவித்தனர்.

மீரிகம, கல்எலியவிலுள்ள குறித்த சிறுவனின் வீட்டுக்கு விஜயம் செய்த, ஒளடத உற்பத்திகள்‌, வழங்குகைகள்‌ மற்றும்‌ ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர்‌ சன்ன ஜயசுமண, இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என, ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 03ஆம் திகதி வைத்தியசாலைக்கு சென்றதை தொடர்ந்து, குறித்த சிறுவனின் மருந்து ஏன் மாற்றப்பட்டன என்பதற்கான காரணத்தை கண்டறிய விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும் என, இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

மருந்தில் ஏற்பட்ட மாற்றம் சிறுவனின் பார்வையை இழக்கச் செய்துள்ளது. ஏன் இம்மாற்றம் இடம்பெற்றது என்பது தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும் என, அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுவனின் பார்வையை மீண்டும் கொண்டு வருவதற்கு முடியுமான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் எனவும், இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்

Related posts