பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி

பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகம் 2.6 லட்சம் தொற்று எண்ணிக்கையைக் கடந்த நிலையில், சென்னையும் ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. குறிப்பாக சென்னை, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கரோனா அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. இதனால் சின்னத்திரை படப்பிடிப்பு மட்டுமே சென்னையில் நடைபெற்று வருகிறது. சினிமா படப்பிடிப்புக்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. கரோனா அச்சுறுத்தலால் பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே இருக்கிறார்கள். சிலருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டாலும், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் குணமாகிவிட்டார்கள். தமிழ்த் திரையுலகில் முதல் நபராக தனக்குக் கரோனா தொற்று இருப்பதாக தெரிவித்தவர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன். அவரும் குணமாகி விட்டார். இன்று (ஆகஸ்ட் 5) காலை முதலே பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று ஏற்பட்டு…

சிகப்பு ரோஜாக்கள் 2-ம் பாகம்; கதாநாயகி கீர்த்தி சுரேஷ்?

சிகப்பு ரோஜாக்கள் 2-ம் பாகத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் அல்லது சமந்தாவை நடிக்க வைக்கலாம் என கூறப்படுகிறது. பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்து 1978-ல் வெளியாகி வசூல் குவித்த படம் சிகப்பு ரோஜாக்கள். ஆண்களை மயக்கி ஆசை வலையில் வீழ்த்தும் பெண்களை தேடிபிடித்து கொலை செய்து வீட்டு தோட்டத்தில் புதைக்கும் சைக்கோ கொலையாளி பற்றிய கதை. இந்த படம் இந்தியில் ராஜேஷ் கன்னா நடிப்பில் வெளியானது. இளையராஜா இசையில் படத்தில் இடம்பெற்ற நினைவோ ஒரு பறவை, இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க பாரதிராஜா மகன் மனோஜ் முயற்சிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. தற்போது சிகப்பு ரோஜாக்கள் இரண்டாம் பாகத்தை பாரதிராஜாவே இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பெண்களை ஆசை…

இறைவனுக்கும் மக்களுக்கும் தொடர்பை ராமர் கோவில் ஏற்படுத்தும் : மோடி

ராமர் கோவில் தேசத்தை ஒருங்கிணைக்கும். இறைவனுக்கும் மக்களுக்கும் நேரடி தொடர்பை ராமர் கோவில் ஏற்படுத்தும் என பிரதமர் மோடி கூறினார். ராமபிரான் பிறந்த அயோத்தியில் அவருக்கு கோவில் கட்ட வேண்டும் என்பது இந்துக்களின் நீண்டநாள் ஆசையாகும். அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவதற்காக விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ். எஸ். போன்ற அமைப்புகள் நீண்ட காலமாக முயற்சிகள் மேற்கொண்டு வந்தன. ஆனால் அங்கு சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தின் உரிமை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருந்ததால் இந்த முயற்சிகள் நிறைவேறாமல் இருந்தன. பல்லாண்டுகளாக நீடித்து வந்த இந்த சட்டப்போராட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவுக்கு வந்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்த சுப்ரீம் கோர்ட்டு, இதற்காக அறக்கட்டளை ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டது.…

தமிழகத்தில் உயிர் இழந்த இலங்கை தாதா

தமிழகத்தில் உயிர் இழந்த இலங்கை தாதாவின் உடல் எரிக்கப்பட்ட சம்பவத்தில், அவரை காதலியே பழிக்கு பழியாக கொலை செய்திருக்கலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சிவகாமி சுந்தரி, (36). இவர் கோவை சேரன் மாநகர் கிரீன் கார்டன் பகுதியில் தங்கியிருந்த தனது உறவினர் பிரதிப்சிங் (35) என்பவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் என, பீளமேடு போலீசாரிடம் புகார் செய்தார். இதற்காக அவர் பிரதாப்சிங்கின் அடையாள சான்றாக ஆதார் அட்டையை வழங்கினார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் பிரேதப்பரிசோதனைக்கு பின் சடலத்தை ஒப்படைத்தனர். சிவகாமி சுந்தரி மற்றும் உயிரிழந்தவருடன் தங்கியிருந்த இலங்கை கொழும்பை சேர்ந்த அமானி தான்ஜி, (27) இருவரும் சடலத்தை மதுரைக்கு எடுத்துச் சென்று எரித்துள்ளனர். இந்தநிலையில், இவ்வழக்கு குறித்து சந்தேகமடைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உயிரிழந்தவரின்…

கருணாஸ்-க்கு கொரோனா பாதிப்பு உறுதி

நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ்-க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், முன்களப் பணியாளர்கள், சினிமா, அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் சமீபத்தில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முதல்-மந்திரிகள் மற்றும் ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ்-க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாவலருக்கு கொரோனா உறுதியான நிலையில் கருணாஸ்-க்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் திண்டுக்கல் வீட்டில் கருணாஸ் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தற்போது திருவாடானை தொகுதி எம்எல்ஏ-வாக கருணாஸ் இருந்து வருகிறார்.

மதுபானசாலைகளை இன்றும் நாளையும் மூடிவைக்க பணிப்பு

நாடு முழுவதுமுள்ள அனைத்து மது பான சாலைகளும் இன்றும் நாளையும் மூடப்படவுள்ளன. இத்தீர்மானத்திற்கு எதிராக செயற்படும் மதுபான உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் விற்பனை நிலைய அனுமதி பத்திரமும் இரத்துச் செய்யப்படும். இவ்விடயம் தொடர்பான முறைப்பாடுகளை பொது மக்கள் 1913 இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியுமென மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பை பலப்படுத்த உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வன்முறைச் சம்பவங்கள் தோற்றம் பெறுவதை தவிர்ப்பதற்கு இரண்டு நாட்கள் மதுபானசாலைகள் மூடப்பட வேண்டுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, மதுவரி திணைக்களத்துக்கு எழுத்து மூலமாக அறிவித்ததை தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2 மணி வரையான வாக்குப் பதிவுகளின் விபரம்

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இன்று மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்யமுடியும். இதன்படி இன்று பிற்பகல் 2 மணி வரை 22 தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் விகிதம் பின்வருமாறு, நுவரெலியாவில் 65% களுத்துறையில் 60% ஹம்பாந்தோட்டையில் 60% மாத்தளை 58% மொணராகலையில் 56% கண்டியில் 55% காலியில் 55% வன்னியில் 55% மட்டக்களப்பில் 55% இரத்தினபுரியில் 55% திகாமடுல்லையில் 55% பொலன்னறுவையில் 55% கம்பஹாவில் 53% கேகாலையில் 55% மாத்தறையில் 54% யாழ்ப்பாணத்தில் 53% புத்தளத்தில் 52% திருகோணமலையில் 50% கொழும்பில் 51% அனுராதபுரத்தில் 50% பதுளையில் 50% குருணாகலையில் 49%