அதர்வா தம்பி பெண் டைரக்டருடன் காதல் திருமணம்

நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ், விஜய் குடும்பத்து மாப்பிள்ளை ஆகிறார். மணமகள், ஒரு படத்தை டைரக்டு செய்தவர். இது, காதல் திருமணம். மறைந்த நடிகர் முரளிக்கு 2 மகன்கள், ஒரு மகள் இருக்கிறார்கள். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. மூத்த மகன் அதர்வா, தமிழ் பட உலகின் இளம் கதாநாயகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வளர்ந்து வரும் இவர், தமிழ் பட உலகில் தனக்கென்று ஒரு தனி மார்க்கெட் உருவான பின், திருமணம் செய்து கொள்வதாக கூறி வருகிறார். இந்த நிலையில், அதர்வாவின் தம்பி ஆகாஷ் காதல் வலையில் சிக்கியிருக்கிறார். இவர் சிங்கப்பூரில், “எம்.பி.ஏ.” படித்து வருகிறார். இவருக்கும், நடிகர் விஜய்யின் உறவுப்பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்து இருக்கிறது. பெண் டைரக்டர் அந்த பெண்ணின் பெயர், சினேகா பிரிட்டோ. விஜய்யின் அத்தை மகள்.…

விவசாயி ஆன இயக்குநர் பாண்டிராஜ்

கரோனா ஊரடங்கினால் இயக்குநர் பாண்டிராஜ் விவசாயி ஆக மாறியிருக்கிறார். 'பசங்க', 'வம்சம்', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை' உள்ளிட்ட பல வரவேற்புப் பெற்ற படங்களை இயக்கியவர் பாண்டிராஜ். அடுத்ததாக இயக்கவுள்ள படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே கரோனா ஊரடங்கு அறிவிக்கப்படும்போதே தனது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார் பாண்டிராஜ். அங்கு தனது தந்தையால் விவசாயம் செய்ய முடியாது என்று கைவிடப்பட்ட நிலத்தினைச் சமன்படுத்தி, மண் மாற்றி விவசாயம் செய்யத் தொடங்கியுள்ளார் பாண்டிராஜ். காலையிலேயே குடும்பத்தினருடன் நிலத்துக்குச் சென்றுவிட்டு மாலையில்தான் வீடு திரும்புகிறார். தற்போது தனது நிலத்தில் வெண்டைக்காய், கொத்தவரங்காய் உள்ளிட்ட சில காய்கறிகளைப் பயிரிட்டுள்ளார். மேலும், தென்னை, மா ஆகிய மரக் கன்றுகளையும் நட்டுள்ளார். இந்த விவசாயப் பணிகளுடன் இணைந்து தனது அடுத்த படத்துக்கான கதையையும் கவனித்து வருகிறார். முன்னதாக, சென்னையில் இருக்கும்போது பாண்டிராஜ்…

நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விழுப்புரம் இளைஞர் பிடிபட்டார். சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எதிர் முனையில் செல்போனில் பேசியவர், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்துவிடும் என்றும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். கட்டுப்பாட்டு அறை போலீஸார் இத்தகவலை உடனடியாக உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து, விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம் பாஸ்கர் காலனியில் உள்ள விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு நிபுணர்களுடன் விருகம்பாக்கம் போலீஸார் சென்றனர். வெடிகுண்டுகளை கண்டறியும் கருவி, மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டது. நீண்ட நேரம் சோதனை நடத்தியும் வெடிகுண்டு எதுவும் சிக்காததால், தொலைபேசி மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதற்கிடையில், சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன்…

ஓடிடி தளத்தில் வெளியாகும் ‘டெடி’?

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'டெடி' திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. ஆர்யா நடிப்பில் சக்தி செளந்தர்ராஜன் இயக்கியுள்ள படம் ‘டெடி’. திருமணத்துக்குப் பிறகு ஆர்யா - சயீஷா ஜோடியாக நடித்துள்ள முதல் படம் இது. இயக்குநர் மகிழ் திருமேனி, கருணாகரன், சதீஷ், சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. ஆர்யாவுடன் முழுக்கவே டெடி பொம்மை வருவது போன்ற கதை என்பதால் அதிகமான கிராபிக்ஸ் காட்சிகள் இருந்தன. இதனால் நீண்ட நாட்களாக இதன் பணிகள் நடைபெற்று வந்தன. சமீபத்தில் வெளியிடப்பட்ட 'டெடி' படத்தின் டீஸர் மற்றும் பாடலுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படமும் திட்டமிட்டப்படி வெளியாகவில்லை. தற்போது தயாராகி இருக்கும் படங்களை ஓடிடி நிறுவனங்கள் டிஜிட்டல் வெளியீட்டுக்குக்…