உன்னதத்தின் ஆறுதல்! வாரம். 20. 16

தேவனுக்கு வாய்ப்பளியுங்கள்.

சகோ. பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.

ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.

இன்றைய சிந்தனையை வாசிக்கும் அனைவரும் ஓர் உண்மையை விளங்கிக் கொள்ள முடியும். காரணம் இன்றைய சூழ்நிலை இதற்கு ஓர் சிறந்த சாட்சியாகும். எம்மில் அநேகர் பேஸ்புக் – முகநூல் வைத்திருக்கிறோம். அதில் வெளிவந்த ஒரு பெரிய உண்மை என்னவென்றால் உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் தேனைத்தேடிய காட்சியாகும். நான் வாழும் டென்மார்க்கில் – பிலூண்ட், ஓகூஸ், ஒல்போ – என்ற மூன்று விமானநிலையங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து தேவனைத் ஆராதித்தனர்.

காரணம் இயேசுவால் இந்த வேதனையில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையால். அதே நேரம் இலங்கை, இந்தியா போன்ற நாட்டைச் சேர்ந்த மக்கள் எவ்வளவு தூரம் சூழ்நிலைகளால் மக்களை வேதனைப்படுத்தினார்கள் என்றும் எமக்குத் தெரியும். இந்த உண்மையை 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இயேசு தமது வாழ்வில் வெளிப்படுத்தினார்;. இதனையே கீழ்வரும் வேதப்பகுதி எமக்கு தெரியப்படுத்துகிறது.

வாசிப்போம் மாற்கு 6:1-6

அவர் அவ்விடம் விட்டு தாம் வளர்ந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீசரும் அவரோடேகூட வந்தார்கள். ஓய்வுநாளானபோது ஜெபஆலயத்தில் உபதேசம் பண்ணத் தொடங்கினார். அநேகர் கேட்டு ஆச்சரியப்பட்டு;, இவைகள் இவனுக்கு எங்கேயிருந்து வந்தது? இவன் கைகளினாலே இப்படிப்பட்ட பலத்த செய்கைகள் நடக்கும்படி இவனுக்கு கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது? இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் என்பவர்களுக்கு சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி அவரைக்குறித்து இடறல் அடைந்தார்கள்.

இயேசு அவர்களை நோக்கி, தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார். அங்கே சில நோயாளிகள்மேல் கைகளை வைத்து, அவர்களை குணமாக்கினதேயன்றி வேறெரு அற்புதங்களையும் செய்யக்கூடாமல், அவர்களுடைய அவவிசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்ட, கிராமங்களில் சுற்றித்திரிநு;து உபதேசம் பண்ணினார்.

ஒரு சிறுபிள்ளை தேவன் நாள் முழுவதும் என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்று என்னிடம் கேட்டான். தேவன் நம்முடைய தனிப்பட்ட வாழ்வில் கிரியை செய்வதற்கு நாம் எவ்வளவாக அவரை அனுமதிக்கிறோம் என்பதை அந்த கேள்விக்கான பதில் சார்ந்திருக்குமென்றால், நம்மில் சிலர் அந்த கேள்விக்கு ” அவர் அதிகமாக கிருபை செய்வதில்லை” என்று பதிலளிக்க வேண்டியிருக்கும். நம்முடைய வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளில் தேவனை நம்புவதாக கூறிக்கொள்கிறோம். என்றாலும், நாம் அவரையும் அவருடைய வார்த்தையையும் சார்ந்து கொள்ளாமல், நம்முடைய சொந்த வழியில் செயற்படுகிறோம். இது ஒரு குருட்டாட்டமான விசுவாசம். தேவன் தொடர்ச்சியாக கிரியை செய்து கொண்டிருந்தாலும், அவர் நம்முடைய சார்பில் செய்யக்கூடிய கிரியைகளின் அளவை நாம் தீர்மானிப்பதற்கு அவர் நம்மை அனுமதிக்கிறார்.

நாம் மேலேவாசித்த 6ம் அதிகாரத்தில் இயேசு தாம்வளர்ந்த ஊரில் அற்புதங்களைச் செய்ய முயற்சித்தபோது இந்த சத்தியம் வெளிப்படுவதை நாம் பார்க்கிறோம். அந்த ஊர் மக்கள் அவரை தச்சனின் மகனாக அறிந்திருந்தார்கள். அவரை தேவகுமாரனாக ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாக அவர்களுக்காக அவர் செய்யக்கூடிய அற்புதங்களின் எல்லையை அவர்கள் கட்டுப்படுத்தினார்கள். (வச. 5) எனவே இயேசு மற்றப் பட்டணங்களுக்குச் சென்றார்.

என்னுடைய வாலிப நாட்களில், நான் என்னுடைய பெலவீனங்களை வெளிப்படுத் தாமல், ஒரு உறுதியான கிறிஸ்தவனாக இருப்பதற்கு முயற்சி செய்தேன். பின்பு ஒரு கடினமான அனுபவத்தின் மூலமாக நான் இந்தப் பாடத்தை கற்றுக் கொண்டேன். உறுதியான கிறிஸ்தவர்கள் தங்களுடைய பெலவீனங்களைக் குறித்து வெட்கப் படாமல், அவற்றை ஒப்புக்கொள்கிறார்கள். நான் தேவனை அதிகமாக சார்ந்து கொள்ளும்போது, அவர் என்னில் அதிகமாக கிரியை செய்ய ஒரு வாய்ப்பை அளிக்கிறேன். அதன் நிமித்தமாக தேனுடைய உதவியோடு என்னால் தேவனிடத்தில் இருந்து எனது குறைவையும், எனது தேவையையும், என்னால் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையைப் பெறுகிறேன். நீங்களும் அந்த நம்பிக்கையைப் பெறமுடியும்.

இதனை உணர்ந்த கோடிக்கணக்கானோர் இயேசுவிடம், எங்கள் கண்காண தங்களைத் தாழ்த்தி இந்த அழிவில் இருந்து மக்களை தேவன் காக்கவேண்டுமென்று மண்றாடுகிறார்கள். நாங்களும் எங்களைத் தாழ்த்தி, எங்களுக்காகவும், ஏனைய மக்களுக்காகவும் தேவனிடம் மன்றாடுவோம்.

தேவனுடைய பெலனை அனுபவிப்பதற்கு, நாம் நம்முடைய பெலவீனத்தை ஒப்புக்கொள்ளவேணடும்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark.,

Related posts