ஐ.நா மனித உரிமை.. உடன்பாட்டிலிருந்து இலங்கை விலகுகிறது..!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் 2015 ஆம் ஆண்டு கூட்டாக கொண்டு வந்த தீர்மானத்தை மீளப்பெற்றுக் கொள்ள இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்றுவரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுள்ள அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்த அமைச்சரவையின் தீர்மானம் பின்வருமாறு,

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 இன் கீழான இலங்கையின் நல்லிணக்கம் பொறுப்புகூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்பாட்டை முன்னெடுத்தல்.

நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்ட தொடரில் இலங்கை அரசாங்கத்தின் அணுகல் தொடர்பில் கீழ் குறிப்பிடப்பட்டவற்றை மேற்கொள்வதற்கும், இதன் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தேவையான இராஜதந்திர நடவடிக்கையை மேற்கொள்வதற்கும் வெளிநாட்டு தொடர்புகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

* 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இல 30/1 மற்றும் 2017 மார்ச் மாதம் இலக்கம் 34/1 ஆகிய அறிமுக பிரேணை உரை நிறைவேற்றப்பட்டு உள்ளடக்கப்பட்ட போதிலும் அவற்றின் அடிப்படையிலான இலங்கையின் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை மேம்பாடு ஆகிய கருப்பொருளை கொண்ட 2019 மார்ச் மாதம் இலக்கம் 40/1 இன் கீழான ஆலோசனை நிறைவேற்றலில் ஏதேனும் அனுசரனையில் இருந்து வெளியேறுவதற்கு இலங்கை மேற்கொண்ட தீர்மானத்தை அறிவித்தல்.

நிரந்தர மனித உரிமை விதிமுறை உத்தரவு / சபை மற்றும் பொறி உள்ளிட்ட, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் பிரதிநிதியுடன் தொடர்ச்சியாக செயற்படுதல் மற்றும் அவர்களின் தேசிய முக்கியத்துவம் மற்றும் கொள்கைக்கு அமைவாக தேவையான வகையில், செயற்திறனை மேம்படுத்துதல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளுதல்

* அரசாங்கத்தின் கொள்கை கட்டமைப்பை கடைப்பிடித்து, தற்பொழுது முன்னெடுக்கப்படும் பொறி ஏற்றவகையில் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட அனைத்து உள்ளடக்கம், தேசிய ரீதியில் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் நிலையான சமாதானத்தை அடைவதற்கு அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை அறிவித்தல். மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறுதல் தொடர்பான குற்றச்சாட்டை விசாரணை செய்த முழுமையான இலங்கையின் அறிக்கையை மதிப்பீடு செய்தற்கும், அவற்றின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதிலான முன்னேற்றத்தை மதிப்பீடு செய்து புதிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, நடைமுறைப்படுத்தக்கூடிய நடவடிக்கை ஆலோசனைகளை மேற்கொள்வதற்கும் உயர் நீதிமன்றத்தின் நீதியரசரின் கீழ் விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிததல்.

* 2030 ஆம் ஆண்டு பேண்தகு அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல் ஆவணத்தில் உள்ளடங்கிய இலங்கை கொண்டுள்ள கடப்பாட்டுக்கு பொருத்தமான வகையில், சரியான ஜனநாயக மற்றும் உடனடி நடவடிக்கையின் ஊடாக, இது வரையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் தேவையான நிறுவனத்திற்கான மறுசீரமைப்பை அறிமுகப்படுத்துதல். சட்டத்தின் கீழ் நபர்கள் மற்றும் இணக்கப்பாட்டு உரிமைகள் போன்று பாதுகாப்பில் முன்னேற்றத்தை மேற்கொள்வதற்கும், நீதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்தல் மற்றும் சமூகத்தில் உள்ள விபத்திற்கு உட்படக்கூடிய பிரிவுகளின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுத்தல், பொது மக்கள் தொடர்பில் அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பில் வெளிப்பட்டுள்ள கொள்கையை பிரகடனப்படுத்துதல்.

* ஐக்கிய நாடுகள் அமைப்பின் அங்கத்துவ நாடுகளின் ஒத்துழைப்புடன் பிரேரணையை முடிவிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கையை மேற்கொள்வதில் இலங்கை அரசாங்கத்தில் உள்ள கடப்பாட்டைவெளிப்படுத்துதல்.

Related posts