இலங்கையில் 40.000 போலி வைத்தியர்கள் ! நாட்டை காக்க மைத்திரி போட்டி !

இலங்கையில் வேலைக்கு விண்ணப்பிப்போரில் பெருந்தொகையானவர் போலி சான்றிதழை அனுப்புவது ஒரு மரபாக இருந்து வருகிறது. தனியார் நிறுவனங்களில் பணியாற்ற வருவோரில் ஏராளமான சான்றிதழ்கள் மனம்போல உச்ச கட்ட சித்தியாக இருக்கும். ஆனால் கேள்வி கேட்டால் திருதிருவென விழிப்பார்கள். இது இன்று இலங்கையின் கூத்தாட்டம்.

காரணம் எதையுமே கட்டுப்படுத்த முடியாத நிலையாக இருக்கிறது. இதை பின்வரும் செய்தி

நாடு முழுவதும் சுமார் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான போலி வைத்தியர்கள் மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அவ்வாறான போலி வைத்தியர்களில் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமானோரை அடையாளம் கண்டுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித்த அளுத்கே தெரிவித்தள்ளார்.

ஆகவே அவ்வாறான போலி வைத்தியர்களை இனங்கண்டு தண்டிக்க நடைமுறையில் சட்டங்களில் திருத்தங்களை கொண்டுவருமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

———-

யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தைக் கண்டித்தும், அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியும் இன்று (18) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு வாய்த்தர்க்கமாக மாறி அடிதடி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வாள்வெட்டுக் குழுவினர் சென்று கல்லூரியில் அடாவடித்தனங்களில் ஈடுபட்டனர்.

இதில் ஆசிரியர்கள் மூவர் காயமடைந்ததுடன் வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார். இவ்வாறான சம்பவங்களால் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டிருந்தது.

இந் நிலையிலையே அந்த வன்முறைக் குழுவின் சம்பவங்களைக் கண்டித்தும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் பாதுகாப்பை உறுதியப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியும் இன்று காலை மாணவர்கள் ஆசிரியர்கள் பணியாளர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது மாணவர்கள் மத்தியில் ஏற்படிருக்கும் அச்ச உணர்வைப் போக்கி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட தரப்பினர்களுக்கு மகஐர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

———

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்பதற்காகவே தான் மீண்டும் பொதுத் ​தேர்தலில் போட்டியிடுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தான் 26 வருடங்கள் பாராளுமன்றத்திலும் 5 வருடங்கள் ஜனாதிபதியாகவும் கடமையாற்றி எதிர்வரும் காலத்தை நிம்மதியதியாக வாழ தீர்மானித்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கட்சியின் உறுப்பினர் மீண்டும் தேர்தலில் களமிறங்குமாறு வேண்டி கொண்டதன் அடிப்படையில் அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts