எதிர் வரும் 2030 ற்குள் பற்றரியில் ஓடும் ரயில் வண்டிகள்..!

டென்மார்க்கில் எதிர்வரும் 2030 ம் ஆண்டுக்குள் பற்றரியில் ஓடும் ரயில்வண்டிகள் பரீட்சார்த்தமாக ஓட விடப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

அடுத்து வரும் பத்து வருடங்களில் பசுமைச்சக்தியாக பொதுப் போக்குவரத்தை மாற்றும் முயற்சியில் ஒர் அங்கமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதட்கான சிறப்பு ரயில் தண்டவாளமானது தலைநகரை அண்டி கிலறுள் – கெல்சிங்குய ஆகிய இடைத் து}ரங்களில் அமைக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் பெனி எங்கல் பிரீச்சற் தெரிவித்தார்.

இதனால் மின்சார கம்பிகள் மேலால் ஒடும்ரயில் வண்டி பாதைகள் மறைந்து, புதியதொரு ரயில் வண்டிகளின் தண்டவாளப் பாதைக்கான காட்சி உருவாகும்.

மேலும் அவர் கூறும் போது, யேர்மனிய துணை மாநிலங்களான சிலஸ்விக் – கொல்ஸ்ரீன் பகுதியில் 55 பற்றரியில் ஓடும் ரயில் வண்டிகள் இப்போது சேவையில் உள்ளன. இத்தகைய ரயில் வண்டிகள் செலவு குறைவாகவும், பராமரிப்பு நேரம் குறைவாகவும் உள்ளன.

அதே வேளை மின்சார ரயில்வண்டிகளுக்கான புதிய மின்சார கேபிள்களை வாங்க டென்மார்க்க அரசு சுமார் 13 பில்லியன் குறோணர்களை ஒதுக்கியுள்ளது என்று பொலிற்றிக்கன் கூறுகிது.

இதற்குக் காரணம் பற்றரி வண்டிகள் சாதாரண மின்சார கார்கள் போல மூச்சு குறைந்தவையே, அசுர வேகத்தில் சரக்கு வண்டிகளை இழுக்காது.

ஆகவே பயில்வான் போல மூசி இழுக்கும் பழைய மின்சார வண்டிகள் தவிர்க்க முடியாதவையே.

எனினும் நாட்டை பசுமை சக்தியாக்க டென்மார்க் இப்படி பல வழிகளில் முயல்கிறது. வருங்காலத்தில் பற்றரி பெரு வெற்றி பெறலாம்.

ஆனால் மத்திய கிழக்கு எரிபொருள் பலமிழக்கும் என்பதும் இன்னொரு பொருளாதார போராகும்.

அலைகள் 14.02.2020

Related posts