கொம்பனி தெரு மக்களுக்கு ஹர்ச டி சில்வா வழங்கிய வாக்குறுதி

கொம்பனி தெரு பகுதியில் வசிக்கும் மக்கள் நேற்று (06) மாலை அந்த பகுதியில் உள்ள ரயில் நிலையத்திற்கு முன்னாள் ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 150 குடும்பங்கள் கலந்துக்கொண்டனர்.

கடந்த அரசாங்கம் மாடி வீடுகளை அமைத்து தருவதாக தெரிவித்து தமது பழைய வீடுகளை அகற்றிய போதிலும் அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என ஆர்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.

புதிய வீடுகள் அமைத்து தரப்படும் வரை முன்னைய அரசாங்கம் தம்மை வாடகை வீடுகளில் வசிக்குமாறும் அதற்கான வாடகை பணத்தையும் செலுத்துவதாகவும் உறுதியளித்தாக ஆர்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.

அவ்வாறு வழங்கப்பட்டு வந்த வாடகை பணம் தற்போது இல்லாது செய்யப்பட்டுள்ளதாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

ஆர்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபூர் ரஹ்மான் மற்றும் ஹர்ச டி சில்வா ஆகியோர் சென்று மக்களுடன் கலந்துரையாடினர்.

அதற்கமைய குறித்த பிரச்சினைக்கான தீர்வு தற்போது முன்வைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா அங்கு தெரிவித்தார்.

அவ்வாறு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் வரை வாடகை பணம் வழங்கப்படும் எனவும் குறிப்பாக ஜனவரி மாதத்திற்கான வாடகை பணம் எதிர்வரும் நான்கு நாட்களுக்குள் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

Related posts