ராதாரவி என்ன சொல்ல வருகிறார் என்பது தெரியவில்லையே சாமி !

குடியுரிமைச் சட்டத்தை அன்று ஆதரித்துக் கையெழுத்திட்டவர்கள், இன்று எதிர்த்துக் கொடி பிடிக்கிறார்கள் என்று 'தமிழரசன்' இசை வெளியீட்டு விழாவில் ராதாரவி பேசினார். பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன், சுரேஷ் கோபி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தமிழரசன்'. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (டிசம்பர் 29) நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், இயக்குநர் பாரதிராஜா, ராதாரவி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் ராதாரவி பேசியதாவது: "இந்திப் பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களை, தமிழ் பாட்டுக் கேட்க வைத்தவர் அண்ணன் இளையராஜா மட்டும் தான். அவரைப் பார்த்து சினிமாவுக்கு வந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனாலும்,…

மஞ்சு வாரியர் மீது விரோதம் இல்லை -நடிகர் திலீப்

மலையாள நடிகை மஞ்சுவாரியரும், நடிகர் திலீப்பும் விவாகரத்து செய்து பிரிந்த மஞ்சு வாரியர் மீது விரோதம் இல்லை நடிகர் திலீப் கூறினார். மலையாள நடிகை மஞ்சுவாரியரும், நடிகர் திலீப்பும் 1998-ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார்கள். நடிகை காவ்யா மாதவனை திலீப் 2-வது திருமணம் செய்து கொண்டார். மலையாள முன்னணி நடிகையை கூலிப்படையை ஏவி கடத்திய புகாரில் திலீப் கைதாகி 85 நாட்கள் சிறையில் இருந்து விட்டு ஜாமீனில் வந்து இருக்கிறார். விவாகரத்துக்கு பிறகு மஞ்சுவாரியர் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். அசுரன் படம் மூலம் தமிழிலும் அறிமுகமானார். இந்த நிலையில் மலையாள தொலைக்காட்சிக்கு திலீப் அளித்த பேட்டியில் கூறியதாவது:- “நடிகை கடத்தல் வழக்கில் முக்கியமான விவரங்களை விரைவில் வெளியிடுவேன்.…

ரஜினியை சந்தித்த குஷ்பு மகள்

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. குஷ்பு மகள் அனந்திதாவும் படப்பிடிப்புக்கு சென்று ரஜினியை சந்தித்து புகைப்படம் எடுத்து ஆட்டோகிராப் வாங்கி உள்ளார். சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடந்து வருகிறது. இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 3 கதாநாயகிகள் நடிக்கின்றனர். ரஜினிகாந்த் 2 பெண்டாட்டிக்காரர் கதாபாத்திரத்தில் வருகிறார் என்றும், குஷ்புவும், மீனாவும் மனைவிகளாக நடிக்கின்றனர் என்றும் கூறப்பட்டது. குஷ்பு வில்லி வேடத்தில் நடிக்கிறார் என்று இன்னொரு தகவலும் வெளியானது. இவற்றை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேசுக்கு படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய புகைப்படம் வலைத்தளத்தில் பரவியது. இந்த நிலையில் குஷ்பு மகள் அனந்திதாவும் படப்பிடிப்புக்கு சென்று ரஜினியை சந்தித்து…

30.12.2019 : அமெரிக்க குடியுரிமையுடன் இந்தியர்கள் ஆர்பாட்டம் !இந்தியா ருடே..!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்திய வம்சாவளியினர் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் பேரணியாக திரண்டனர். நாடு முழுவதும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த வாரம் தீவிர போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் சில இடங்களில் வன்முறையாக வெடித்தது. நாட்டின் தலைநகர் டெல்லியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர், பல பகுதிகளில் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டனர். இதில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. உத்தரபிரதேசத்தின் லக்னோ, அலிகார் பகுதிகளில் நடந்த போராட்டம் மாநிலம் முழுவதும் பரவி பல இடங்களில் கலவரம் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் வாகனங்களுக்கு தீ வைத்தும், போலீசார் மீது கற்களை வீசியும் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். சில இடங்களில் ரப்பர் குண்டுகள் மூலம் போலீசார் சுட்டனர். இந்த போராட்டத்தில்…

65 வயது நிரம்பிய முதியோர்களுக்கு திருமணம்!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள ராமபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணய்யர் (வயது 70). இவர் சமையல் வேலை செய்தார். இவரிடம் கொச்சுஅனியன் (67) என்பவர் உதவியாளராக இருந்துள்ளார். இந்த நிலையில் கிருஷ்ணய்யர் இறந்து விட்டதால் அவருடைய மனைவி லட்சுமி அம்மாளை (66) ராமபுரத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். இவரை கொச்சுஅனியன் அடிக்கடி சந்தித்து ஆறுதல் கூறி வந்தார். அப்போது இரண்டு பேரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருக்கும் வகையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இந்த முடிவை முதியோர் இல்லத்தில் உள்ள சூப்பிரண்டு வி.ஜி. ஜெயக்குமாரிடம் தெரிவித்துள்ளனர். அவரும் இதற்கான ஏற்பாடுகளை செய்தார். இதையொட்டி 2 பேரின் திருமணமும் முதியோர் இல்லத்தில் வைத்து நடந்தது. இந்த திருமண விழாவுக்கு மாநகராட்சி மேயர் அஜிதா விஜயன் தலைமை தாங்கினார். விழாவில் மந்திரி சுனில்குமார்…

முள்ளிவாய்க்காலை வேடிக்கை பார்த்த தமிழரசு கட்சி : இலங்கை : 30.12.2019

வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு காரணம் தமிழரசுக் கட்சியே. நிலைமை இவ்வாறிருக்கும் போது வடக்கு கிழக்குக்கு வெளியே தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வருகின்றன. தயவு செய்து அவர்களையாவது நிம்மதியாக வாழவிடுங்கள் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஏதோ ஓரளவு வறுமையான வாழ்விலும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் செம்மையாக வாழ்ந்து வருகின்றார்கள். அதுமட்டுமல்ல பலவருடங்களாக அரும்பாடுபட்டு உருவாக்கிய பல தொழிற்சங்கங்கள் இன்றும் அங்கு பலமாகவே இருக்கின்றன. காலத்திற்குக் காலம் மாறி மாறி வரும் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் மூலம் அமைச்சுப்பதவிகளைப் பெற்றுத் தங்கள் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றார்கள். அங்குள்ள தலைவர்கள் அந்த மக்களின்…