சபரிமலை கோவில் வருமானம் ரூ.100 கோடியை தொட்டுள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது.

கோவில் நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து சபரிமலைக்கு வந்து செல்லும் அய்யப்ப பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கோவிலின் வருவாய் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டில் இதே நாட்களில் சபரிமலை அய்யப்பன் கோவிலின் வருவாய் ரூ.60 கோடியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 27 நாட்களில் ரூ.100 கோடியை தொட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் நேற்று தெரிவித்தனர்.

இந்த வருவாய், காணிக்கைகள், அப்பம் மற்றும் அரவணை பிரசாதங்கள் மூலமாக கிடைத்துள்ளன. இதில் காணிக்கையாக மட்டும் பக்தர்கள் ரூ.35 கோடி செலுத்தியுள்ளனர்.

Related posts