முன்னாள் பிரதமருக்கு பாதுகாப்பு

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்குரிய பாதுகாப்பு ஊழியர் எண்ணிக்கை தொடர்பில் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு, அதற்கேற்றவாறு பாதுகாப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது என்று கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். எனவே எந்தவொரு அரசியல்வாதியாக இருப்பினும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பில் பாதுகாப்புப் பிரிவும், புலனாய்வுப் பிரிவும் இணைந்து ஆராய்வு மதிப்பீடொன்றை மேற்கொள்ள வேண்டும். அவர்களால் வழங்கப்படத்தக்க மதிப்பீட்டின் அடிப்படையில் பாதுகாப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. அச்சந்திப்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில், அதுகுறித்து அமைச்சரவையில் ஏதேனும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா என்று வினவப்பட்ட போதே அவர் இவ்வாறு…

ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படாது : கோட்டாபய

நாட்டின் ஊடக சுதந்திரத்திற்கு தனது ஆட்சிக்காலத்தின்போது எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட மாட்டாது என உறுதியளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். எந்தவொரு நியாயமான விமர்சனத்திற்கும் இடமுள்ளதென்றும் நாட்டுக்கும் நாட்டின் நற்பெயருக்கும் ஏற்றவகையில் ஊடகப் பணியில் ஈடுபட்டு, ஊடகங்களின் மூலம் நாட்டுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு அனைத்து ஊடக நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்குமென தான் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அழைப்பில் ஜனாதிபதிக்கும் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டாவாறு தெரிவித்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் பெரும் எதிர்பார்ப்புக்களுடன் நாட்டின் ஜனாதிபதியாக தன்னை தெரிவு செய்துள்ளனர். அரசியல்வாதிகளினதும் அரச அதிகாரிகளினதும் வினைத்திறனை அதிகரித்தல், ஊழலை ஒழித்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி என்பன அவற்றில் முக்கியமானவையாகும். இந்த நோக்கத்தை அடைந்துகொள்வதற்கு ஊடகங்களின்…

சிறுமி வன்புணர்வு அர்ச்சகர் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

நான்காம் தரத்தில் கல்வி பயிலும் 9 வயதுடைய மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆலய அர்ச்சகர் உள்ளிட்ட இருவரது விளக்கமறியலையும் வரும் 20ஆம் திகதிவரை நீடித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. அர்ச்சகரின் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி என். சிறிகாந்தா பிணை விண்ணப்பம் செய்தபோதும் பாதிக்கப்பட்ட சிறுமியின் நலன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கனகரட்னம் சுகாஷ் கடுமையான ஆட்சேபனையை முன்வைத்த நிலையில் சந்தேகநபர்களின் பிணை விண்ணப்பம் நிராகரித்து விளக்கமறியலை நீதிமன்றம் நீடித்தது. கடந்த நவம்பர் 27ஆம் திகதி பாடசாலையில் சிறுமி அலைபேசி வைத்திருப்பதை ஆசிரியர் கண்டறிந்தார். இதுதொடர்பில் சிறுமியிடம் விசாரித்த போது, வல்வெட்டித்துறை ஆலயம் ஒன்றின் அர்ச்சகர் வாங்கி கொடுத்ததாகவும் அவர் அலைபேசி மூலம் பிரசாதம் தர கூப்பிடுவதாகவும் சிறுமி கூறியுள்ளார். சிறுமியின் தகவலில் சந்தேகம் கொண்ட ஆசிரியர், சிறுவர்…

கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு 21 நாளில் தூக்குத் தண்டனை

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண் டொக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 வாலிபர்களை பொலிஸார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். பெண் டொக்டர் கற்பழித்து கொல்லப்பட்ட 10 வது நாளில் குற்றவாளிகள் கொல்லப்பட்டனர். இந்த என்கவுண்டருக்கு பலரும் வரவேற்பும், ஆதரவும் தெரிவித்தனர். அதே வேளையில் எதிர்ப்பும் கிளம்பியது. என்கவுண்டரில் 4 பேர் சுட்டு கொல்லப்பட்டதற்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு தெரிவித்தார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவையும், பொலிஸாரையும் பாராட்டினார். இது தொடர்பாக அவர் ஆந்திர சட்டசபையில் பேசும் போது, பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு 21 நாட்களுக்குள் விசாரணை நடத்தி தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார். நிர்பயா பெயரில் அனைத்து மாநிலங்களிலும் பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டுள்ளது.…