நேர்கொண்ட பார்வை’ வசூல் நிலவரங்கள் என்ன ?

நேர்கொண்ட பார்வை' படத்தின் வசூல் நிலவரங்கள் என்ன என்பதை படக்குழு தெரிவித்துள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ’நேர்கொண்ட பார்வை’. போனி கபூர் தயரித்து, அவரே நேரடியாக விநியோகஸ்தர்களிடம் கொடுத்து விநியோகம் செய்தார். 'பிங்க்' படத்தின் தமிழ் ரீமேக்கான இந்தப் படம் முதல் நாளில் பெரும் வரவேற்பைப் பெற்றது. விமர்சகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும், இந்தமாதிரியான கதையில் அஜித் நடித்ததை மிகவும் பாராட்டினார்கள். வசூல் ரீதியாகவும் இந்தப் படம் எப்படி இருக்கும் என்று விநியோகஸ்தர்கள் தயங்கியதால் மட்டுமே, தயாரிப்பாளரிடமிருந்து தமிழக விநியோகத்தை கைப்பற்றாமல் இருந்தார்கள். தற்போது 4 நாட்கள் முடிந்துள்ளதால், இந்தப் படம் தமிழகத்தில் மொத்த வசூலில் 40 கோடியைத் தாண்டியுள்ளது. இன்றும் (ஆகஸ்ட் 12) விடுமுறை என்பதால் நல்ல வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இந்தப் படம் கடந்த 4…

சீனாவில் வெளியாகும் ரஜினியின் ‘2.0’

ஹாலிவுட் படங்களுக்கு சீனா பெரிய வர்த்தக சந்தையாக உள்ளது. அங்கு 4 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் ஹாலிவுட் படங்களை திரையிட்டு வசூல் அள்ளுகிறார்கள். இப்போது இந்திய திரைப்படங்களும் சீனாவை குறிவைக்கின்றன. முதன் முதலாக அமீர்கானின் 3 இடியட்ஸ் படம் சீனாவில் வெளியாகி 13 கோடிக்கு மேல் வசூலித்தது. அதன்பிறகு அமீர்கானின் தூம், ஷாருக்கானின் ஹேப்பி நியூ இயர், மை நேம் இஸ் கான் ஆகிய படங்களும் சீனாவில் திரையிடப்பட்டன. இதுபோல் ‘பிகே’ படமும் சீனாவில் 4 ஆயிரம் தியேட்டர்களுக்கு மேல் வெளியாகி ரூ.100 கோடி வசூலித்தது. பாகுபலியும் சீனாவுக்குள் நுழைந்தது. பின்னர் அமீர்கானின் ‘தங்கல்’ படம் சீனாவில் வெளியாகி ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து இந்திய பட உலகினரை ஆச்சரியப்படுத்தியது. தமிழ் படங்களையும் சீனாவில் திரையிட தொடங்கி உள்ளனர். ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார் நடித்த ‘2.0’…

நேர்கொண்டபார்வை இக்காலத் தேவை… ஆணையர்

அஜித்தின் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நேர்கொண்ட பார்வை விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள் குறித்து பேசியிருக்கிறது. இந்த படத்தை பார்த்த திருநெல்வேலி காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவருடைய பேஸ்புக் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. நேர்கொண்டபார்வை இக்காலத் தேவையென நெல்லை காவல் துணை ஆணையர் சரவணன் பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள விரிவான பேஸ்புக் பதிவில், நேர்கொண்ட பார்வையும்... “காவலனுக்கான” தேவையும்! நடிகர் அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அனைத்து துறைகளிலும் மிக வேகமாக முன்னேறி வரும் பெண்கள், தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை சட்டத்தின் துணையுடன் எவ்வாறு எதிர்கொள்வது என்பதை நன்கு…

நாட்டிற்கு ஜனாதிபதி அல்ல அரசியல் யாப்பே தேவை

தற்போது நாட்டிற்கு முக்கிய தேவையாக உள்ளது ஒரு ஜனாதிபதி தேர்தல் அல்ல மாறாக ஒரு புதிய அரசியல் யாப்பேயாகும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயகம் மற்றும் தேர்தல் கண்காணிப்பு கொள்கை அதிகாரி ரிக்கார்டோ செலரி மற்றும் அரசியல் வர்த்தகம் மற்றும் தொடர்பாடல்களிற்கான பிரதி தலைவர் ஆன் வாகியர் சட்டர்ஜி தலைமையிலான குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை இன்று கொழும்பில் சந்தித்து உரையாடினர். குழுவினரை தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன், 1994 ஆம் ஆண்டிலிருந்து நாட்டு மக்கள் தொடர்ச்சியாக 25 வருடங்களாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவாகவே தேர்தல்களில் தீர்ப்பளித்திருக்கிறார்கள். இந்த பின்னணியில் இன்னுமொரு ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதானது மக்கள் ஆணையை மீறுகின்ற ஒரு கபடச் செயலாகும் எனவும் தெரிவித்தார். எனவே…

சஜித்தை ஜனாதிபதியாக்க முழு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்

குடும்ப ஆட்சியினை ஏற்படுத்த வேண்டிய தேவை ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடையாது. ஐக்கிய தேசிய கட்சி மக்களாணையினை மதிக்கும் வேட்பாளரையே தொடர்ந்து களமிறக்கியுள்ளது. இந்த ஜனநாயக பொது கொள்கையே இனியும் தொடரும். அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்க முழு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் சந்திப்பு தற்போது பதுளை நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். நாட்டு மக்களுக்கும், கட்சிக்கும் சேவையாற்றிய அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்குவதே எமது பிரதான நோக்கமாக காணப்படுகின்றது. அவரை வெற்றிப்பெறசெய்ய எந்நிலைக்கும் செல்ல தயார். நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் ஜனநாயக மிக்க அரசாங்கம் நிச்சயம் ஐக்கிய தேசிய கட்சியினால் உருவாக்கப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது என்றும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

கற்பழிப்பு, வெள்ளை வேன் கடத்தல்களை மறந்திட முடியாது

ஊடகவியலாளர்கள் கொலை , சுற்றுலாப்பயணிகள் கற்பழிப்பு மற்றும் வெள்ளை வான் கடத்தல்களை மறந்து விடமுடியாது எனத் தெரிவித்த அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, இன்று பொதுஜன பெரமுனவின் புகழ்பாடுபவர்கள். கடந்த அரசாங்கத்தின் முறைக்கேடுகளை மீள நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் சந்திப்பு தற்போது பதுளை நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். குடும்ப ஆட்சியினை இல்லாதொழித்து ஜனநாயகம் மிக்க அரசாங்கத்தை தோற்றுவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து மக்களின் அரசியல் தீர்வாக காணப்பட்டது. இதனை இலக்காக கொண்டே ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. 2015 ஆம் ஆண்டு ஆட்சியினை கைப்பற்றி ஜனநாயகத்தை அனைவருக்கும் பொதுவுடமையாக்கிய ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒருபோதும் ஆட்சியினை ஒப்படைக்காது. நிச்சயம் மீண்டுமொரு அரசியல் பின்னடைவினை பொதுஜன…

தமிழர்களுக்கான தீர்வை வெளிப்படையாக கூறுபவருக்கே ஆதரவு

ஜனாதிபதி வேட்பாளர் யாராக இருந்தாலும் தமிழ் மக்களுக்கு எதனைச் செய்யமுடியும் என்பது தொடர்பில் தென்னிலங்கை மக்களுடன் வெளிப்படையாகக் கதைக்கக்கூடியவர் யார் என்பதை அறிந்தே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஆதரவு வழங்கும் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் துணைத் தலைவருமான சி.வி.கே சிவஞானம் தெரிவித்தார். அவைத்தலைவரின் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தற்போது ஒவ்வொருகட்சிகளும் வேட்பாளர்களை அறிவிப்பதும் யாருக்கு ஆதரவு என்பதும் பேச்சுவார்த்தைகள் மற்றும் உரையாடல்களை ஆரம்பித்துள்ளார்கள்.இந்த நிலையில் தமிழ் மக்கள் யாரை ஆதரிப்பது தமிழ் மக்களின் சார்பில் செயற்படுகின்ற கட்சிகள் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளும் சந்திப்புக்களை மேற்கொண்டு வருவதாக பல…

ஐ.தே.மு வேட்பாளரே அடுத்த ஜனாதிபதி : மங்கள சமரவீர

கடந்த கால சம்பவங்களைப் படிப்பினையாக எடுத்துக் கொள்ளாத மஹிந்த ராஜபக்‌ஷ வழக்குகளை எதிர்கொண்டுள்ள தனது சகோதரரான கோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியிருப்பதே தோல்வியை உறுதிப்படுத்தியுள்ளது. இதேவேளை, நாம் நிறுத்தும் ஐ.தே.மு வேட்பாளரே அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவாரென நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட அமைச்சர், 2018 ஒக்டோபர் புரட்சியின் மூலம் சட்டவிரோதமாக அதிகாரத்தைக் கைப்பற்றியபோதே மஹிந்த தமது முன்னைய தவறுகள் மூலம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதை தாம் தெரிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் மஹிந்தவுக்கு எதிர்ப்பு தெரிவித்த போதும் அவரது ஆதரவாளர்கள் மூலம் ஜனநாயகத்துக்கு விரோதமாக அவர் செயற்பட்டார். ஆனாலும், நீதிமன்றம் துணிச்சலுடன் செயற்பட்டு மஹிந்தவுக்கு நல்ல பாடம் புகட்டியது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்க்கட்சியில் இருந்து மஹிந்த ராஜபக்‌ஷ என்ன செய்தார் என்பது இப்போதுதான் எமக்குத்…