தளபதி 64-ல் விஜய் ஜோடியாகும் பாலிவுட் நடிகை

தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார். தளபதி 64’ படத்தில் வில்லனாக நடிக்க மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாயகியாக த்ரிஷா, ராஷ்மிகா மந்தனா என பல நடிகைகளின் பெயர்கள் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்நிலையில் படத்தில் விஜய் ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிவி கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கி ஜனவரியில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

Related posts