அலைகள் வாராந்தப் பழமொழிகள் 02.02.2019 சனிக்கிழமை

01. உங்களுக்கு ஓர் இலக்கு இருக்க வேண்டும், இல்லையேல் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது. இதோ சில உதாரணங்கள் : அ. கொலம்பஸ்சிற்கு திட்டம் இருந்ததால்தான் அவர் கப்பல் இலக்கை தொட்டது. ஆ. அடிமைகளுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டுமென ஆபிரகாம் இலிங்கனுக்கு திட்டம் இருந்ததாலேயே அவரால் சாதிக்க முடிந்தது. அ. பதவியேற்றபோது ருஸ்வெல்ரிற்கு பனாமா கால்வாயை கட்ட வேண்டிய திட்டம் இருந்தால் அவரால் அதை நிறைவேற்ற முடிந்தது. இ. மலிவு விலையில் சிறந்த கார் தரவேண்டும் என்ற திட்மிருந்தமையால் ஹென்றி போர்ட்டால் அதை செய்ய முடிந்தது. ஈ. தேவை இருந்தமையால் பர்பாங்க் 1871ம் ஆண்டு உருளைக்கிழங்கை உருவாக்க முடிந்தது. 02. மறுபிறவி இருக்கிறதா என்று யோசிப்பதைவிட, நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வைப் பற்றியும், உலக மக்களின் தற்போதைய வாழ்வைப்பற்றியும்தான் அதிகம் சிந்திக்க வேண்டும். 03. உலகில் பிறந்துவிட்டீர்களா..…

லைக்காவின் பணத்தில் சுந்தர்சி சிம்பு கூத்தாட்டமா..?

வந்தால் ரா{ஜாவாத்தான் வருவேன் என்ற சுந்தர்சியின் சிலம்பரசன் நடித்த வந்தால் ராஜாவாத்தான் வருவேன் என்ற பொன் குஞ்சு படத்தை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. படத்தை பார்த்ததும் எண்ணும் எண்ணங்கள் இப்படியுள்ளன.. சுந்தர்சிக்கு சரக்கு தீர்ந்துவிட்டதென்பதை இந்தப்படமும் மீண்டும் ஒரு தடவை உறுதி செய்துள்ளது. சிம்பு நடிப்பதானால் உயரம் குறைந்த அவர் உடம்பை குறைக்க வேண்டும். அதைவிட்டு தொப்பையை குறைக்காமல் உள்ளவனை எல்லாம் அடித்துப் போடுவது சரியல்ல.. கன்றாவியாக இருக்கிறது. படத்தில் கோடீஸ்வரரான நாசரின் பணத்தை எப்படி செலவு செய்கிறார்கள் என்ற காட்சிகள் வருகின்றன. அதைப் பார்த்தால் படக்குழுவினர் லைக்கா நிறுவனம் பணத்தை அச்சடிப்பதாக நினைத்து வேலை செய்திருப்பது தெரிகிறது. அவர்களுக்கு வெளி நாட்டு பணம் பற்றி ஒன்றுமே புரியவில்லை வெறும் பாமரர்கள் என்பதை படம் முழுவதும் காண முடிகிறது. ஒரு குக்கிராமத்து கதையை சர்வதேச படம் போல…

கடுங்குளிரால் உறைந்தது அமெரிக்கா: பலி 21ஆக உயர்வு

அமெரிக்காவின் மேற்கு திசையிலுள்ள மத்திய பகுதிகளில், பல தசாப்தங்களில் இல்லாத அளவு நிலவும் கடுங்குளிர் காரணமாக இதுவரை குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியான 90 மில்லியன் பேர் இதுவரை மைனஸ் 17 டிகிரி செல்சியஸ் குளிரை அனுபவித்து வருகின்றனர். ஒட்டுமொத்தமாக 250 மில்லியன் அமெரிக்க மக்கள், "துருவ சுழற்சியால்" ஏற்பட்டுள்ள இந்த கடுங்குளிரை அனுபவித்து வருகின்றனர். அதிகப்படியான குளிரை எதிர்கொள்வதால் தோலில் ஏற்படுகின்ற காயங்களுக்கு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வார இறுதியில், வானிநிலை சராசரியைக் காட்டிலும் சற்று வெப்பமாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் யார் யார்? இந்த குளிரில் பொதுவாக வீடற்றவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். நகர் முழுவதும் வெதுவெதுப்பான தங்கு நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஓஹியோவில் யாருமற்ற வீடு ஒன்றில் 60 வயது மதிக்கத்தக்க பெண்மணி…

சௌந்தர்யா திருமண வரவேற்பு; போலீஸ் பாதுகாப்பு

நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும் தொழிலதிபர் விசாகனுக்கும் வரும் 11-ம் தேதி சென்னையில் திருமணம் நடக்கிறது. இதற்காக போலீஸிடம் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு அளித்துள்ளார். சௌந்தர்யா தொழிலதிபர் பிரவீன் என்பவரை கடந்த 2010-ம் ஆண்டு மணந்தார். இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ள நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் சில ஆண்டுக்கு முன் விவாகரத்து பெற்றனர். பின்னர் சௌந்தர்யா திரைப்பட த்துறையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இந்நிலையில் அவரது மறுமணத்துக்கு குடும்பத்தினர் சம்மதிக்க வைத்தனர். இதையடுத்து கோவை தொழிலதிபர் விசாகனுக்கும் திருமணம் செய்ய உத்தேசித்து வரும் பிப்.11 அன்று திருமணம் நடக்க உள்ளது. சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள பிரபல 5 நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடக்கிறது. இந்த திருமணத்தில் இந்தியா முழுதுமிருந்து அரசியல், திரையுலக விவிஐபிக்கள், விஐஅபிக்கள் ரஜினியின் உறவினர்கள் என பலரும்…

பிரித்தானிய பிரஜைகளுக்கு இலவச பயண அனுமதி

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு குறுகிய கால பயணத்தை மேற்கொள்ள விரும்பும் பிரித்தானியப் பிரஜைகளுக்கு, பிரெக்சிற்றுக்குப் பின்னர் இலவச பயண அனுமதியை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டு வருகின்றது. இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியப் பேரவை விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பிரித்தானியப் பிரஜைகளுக்கான குறுகிய கால இலவச விசா அனுமதிக்கான சட்டத்தைக் கொண்டுவருவது தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் விவாதிக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியப் பேரவை தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையில் அங்கத்துவம் வகிக்கும் 26 நாடுகளுக்கு 90 முதல் 180 நாட்களை உள்ளடக்கிய இலவச பயணத்துக்கு பிரித்தானியப் பிரஜைகள் விண்ணப்பிக்க முடியுமெனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எது எவ்வாறாயினும், எதிர்வரும் 2021ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலுள்ள பிரித்தானியப் பிரஜைகள், ஐரோப்பிய பயணத் தகவல் மற்றும் அங்கிகாரத் திட்டத்துக்காக 7 யூரோவை…