சிந்தித்து செயல்பட்டு உயிர் பிழைத்த கணவர்

கள்ளக்காதலருடன் சேர்ந்து உயிருடன் எரித்து கொல்ல முயன்ற மனைவியிடம் இருந்து சிந்தித்து செயல்பட்டு கணவர் உயிர் பிழைத்துள்ளார். மகாராஷ்டிராவில் பால்கார் மாவட்டத்தின் மாணிக்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தம்பதியினர் வசித்து வருகின்றனர். மனைவி (வயது 28) கள்ளக்காதலருடன் சேர்ந்து இருப்பது கணவருக்கு (வயது 35) பிடிக்கவில்லை. தொடர்ந்து அதனை எதிர்த்து வந்துள்ளார். இதனால் அவரை கொலை செய்ய மனைவி முடிவு செய்துள்ளார். நேற்றிரவு கணவரின் கால்களை கட்டி போட்டு விட்டு கள்ளக்காதலர் உதவியுடன் சூடான எண்ணெயை கணவரின் தலை மற்றும் முகத்தில் ஊற்றியுள்ளார். இதன்பின் அவரது முகத்தில் சுத்தியலால் அடித்தும் உள்ளனர். அந்த நபர் தப்பி வெளியே சென்று விடாமல் இருவரும் தடுத்துள்ளனர். இதனால் அதிர்ந்து போன கணவர் சமையலறையில் இருந்த பாத்திரங்களை ஜன்னல் வழியே வெளியில் தூக்கி எறிந்துள்ளார். இதனை கண்ட அருகில் வசித்தவர்கள்…

நோட்ரே டேம் தேவாலயம் முற்றிலும் இடிந்து விழும் அபாயத்தில்

பிரான்சின் விலைமதிக்க முடியாத புராதனச் சின்னமான 850 ஆண்டு பழமையான நோட்ரே டேம் கதீட்ரல் தேவலாயம் முற்றிலும் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசின் மையப்பகுதியில் அமைந்துள்ளது நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயம். உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர் பாரீசில் அமைந்திருந்தாலும், நோட்ரே டேம் தேவாலயமே நினைவுச் சின்னமாக போற்றப்பட்டது. 850 ஆண்டு பழமையான நோட்ரே டேம், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாகவும், ஐரோப்பிய கட்டிட கலைக்கு சான்றாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புகள் கொண்ட இந்த தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் மாதம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதன் காரணமாக, 12வது நூற்றாண்டில் மரச் சட்டங்களை பெருமளவில் பயன்படுத்திக் கட்டப்பட்ட அந்த தேவாலய மேற்கூரையின் பெரும் பகுதி எரிந்து நாசமானது. மேலும், அந்தத் தேவாலயத்துக்கு கம்பீரத்தை அளித்து வந்த…

சுதந்திர தின விழா : கல்பனா சாவ்லா விருது

நாட்டின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தொடர்ந்து 3வது முறையாக சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார். முன்னதாக விழாவில் நடைபெற்ற காவல்துறை, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றார். சென்னையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த பின்னர் தமிழகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூர்ந்து முதல்வர் பழனிசாமி உரையாற்றி நிகழ்த்தினார். பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார். *அப்துல்கலாம் பெயரிலான விருது இஸ்ரோ தலைவர் சிவனுக்கு மற்றொரு நாளில் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தன்று விருது பெற இஸ்ரோ சிவன் வராததால், வேறொரு நாளில் விருது வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். *துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை கடலூர் மீன்வளத்துறை துணை…

முப்படைக்கும் ஒரே தலைவர் பிரதமர் மோடி

இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு இனி முப்படைக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் அடைந்தது. இதையடுத்து இந்திய நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றினார். அதன்பின் செங்கோட்டையில் பேசிய மோடி பல்வேறு விஷயங்கள் குறித்து குறிப்பிட்டார். முப்படைக்கும் ஒரே தலைவர் அப்போது சுதந்திர தின உரையில் அவர் கூறியதாவது, 'நம் பாதுகாப்பு படைகள் மிகவும் சிறப்பு மிக்கவை. இந்த முப்படைகளும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு இன்று நான் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன். அதன்படி இனிமேல் இந்தியாவில் Chief Of Defence Staff(CDS) என்ற புதிய பதவி உருவாக்கப்படவுள்ளது. இந்தப் பதவியை வகிப்பவர் தான் இந்தியாவின் ராணுவம், விமானம்,…