ஓய்வூதியம் பெறுவோருக்கு நல்ல காலம் பிறக்கிறது

டென்மார்க்கின் புதிய வரவு செலவுத்திட்டமானது ஓய்வூதியம் எடுப்போருக்கு ஒரு புதிய கதவை திறக்கவுள்ளது.

பென்சன் எடுப்போருக்கு சம்பளம் கூடுகிறது.. அதேபோல வரி கட்டாமல் வேலை செய்ய அனுமதிக்கப்பட்ட மணித்தியாலங்களின் எண்ணிக்கையும் உயர்கிறது.

சம்பளம் எதிர்வரும் 2020 ல் 0.3 வீதம் கூடுகிறது. அதுபோல எல்ரா செக் எனப்படும் முதியோர் காசோலை சென்ற ஆண்டுடன் ஒப்பிட்டால் அடுத்த ஆண்டு 0.2 வீதம் உயர்கிறது.

போல்க பென்சன் எடுப்போருக்குரிய அடி நிலை பாட்றா என்னும் வரிச்சலுகை வருடாந்தம் 60.000 குறோணர்களில் இருந்து 1.00.000 குறோணர்களாக உயர்கிறது.

இதனால் ஓய்வூதியம் பெற்றோர் கரங்களில் காசு விளையாடப்போகிறது என்கிறது ஆளும் வென்ஸ்ர கட்சியும் டேனிஸ் போல்க்க பார்டியும்.

சீனியர் பிறிமியர் எனப்படும் வரிவிலக்கு பெற்று உழைக்கக் கூடிய தொகை 30.000 ஆகிறது. இதற்காக 30 மணி நேரம் வேலை செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.

01.01.1954 ற்கு பிறந்தோருக்கு இந்த பிறிமியம் தொகையை உழைக்க வழியுண்டு.

இது அரசின் வரவு செலவு திட்டத்தில் பூர்வாங்கமாக பேசப்பட்டுள்ளது. இனி கட்சிகள் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

அதேவேளை இந்த வரவு செலவுத்திட்டம் ஒரு சாயமில்லாத தேநீர் என்று எதிர்க்கட்சி தலைவி மெற்ற பிறடிக்சன் குறை கூறியிருக்கிறார்.

எது எப்படியோ நூறு குறோணர் சம்பளம் உயர்ந்தாலும் அது உயர்வுதானே..?

குடு குடுப்பைக்காரன் நல்ல காலம் வருகுது நல்ல காலம் வருகிறதென உடுக்கை அடிப்பது கேட்கிறது.

கடைசியில் ஆண்டுக்கு ஒருக்கா வருகுதையா நமக்கும் ஐந்தாறு மிட்டாய் கிடைக்குதப்பா என்று வழமைபோல கதை முடிகிறதா யாரறிவார் பராபரமே.

அலைகள் 30.11.2018

Related posts