நிமலராஜனின் நினைவு தினம் யாழ்.பல்கலையில் அனுஷ்டிப்பு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தினம் இன்று யாழ்.பல்கலைகழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்.பல்கலைகழகத்தின் இன்று நண்பகல் பல்கலைகழக மாணவர் ஒன்றிய தலைவர் கிருஸ்ணமீனன் தலைமையில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் விக்னேஸ்வரன் சுடரேற்றி மலர் அணிவித்து அஞ்சலி செலுத்தியிருந்தார்.

அதனை தொடர்ந்து யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறை விரிவுரையாளர் கலாநிதி ரகுராம் மற்றும் ஏனைய விரிவிரையாளர்கள், மாணவர்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இறுதியாக கலாநிதி ரகுராம் அஞ்சலி நினைவுரையாற்றினார். கருத்து சுதந்திரத்திற்காக ஊடகவியலாளர் நிமலராஜன் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர் எனவும், அவர் காட்டிய வழியில் ஏனைய ஊடகவியலாளர்களும் பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் திகதி இரவு யாழ்.குடாநாட்டின் முன்னணி ஊடகவியலாளர் நிமலராஜன் தனது வீட்டில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts