நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ள வடமாகாண முதலமைச்சர்

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்படும் வழக்கு தொடர்பிலேயே அவர் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

வட மாகாண மீன் பிடித்துறை அமைச்சராக இருந்த பி.​டெனிஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை அந்த அமைச்சு பதவியில் இருந்து நீக்க கடந்த ஆண்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதனையடுத்து முதலமைச்சரின் தீர்மானத்தை ரத்துச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி பி.​ டெனிஸ்வரன் மேன்முறையீடு செய்திருந்தார்.

அதன்படி பி.​டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்து மீண்டும் அவருக்கு அந்தப் பதவியை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றத்தின் அந்த உத்தரவை செயற்படுத்தாமை காரணமாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி வடக்கு மாகாண முன்னாள் மீன் பிடித்துறை அமைச்சர் பி.​டெனிஸ்வரன் மனு தாக்கல் செய்தார்.

இதனையடுத்து வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இரு அமைச்சர்களை செப்டெம்பர் 7 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கடந்த ஆகஸ்ட் 08 ஆம் திகதி அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment