அலைகள் வாராந்தப் பழமொழிகள் 07.09.2018 வெள்ளி

01. வாழ்க்கையில் எதிர்பாராத நேரத்தில் நம்மை வெற்றி வாழ்விற்கு அழைத்து செல்லும் அலைகள் வரும். அது அதிர்ஷ்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும். அதை உதாசீனம் செய்தால் அது நம்மை பள்ளங்களில் விழுத்திவிடும். இதுவே வாய்ப்பு வெற்றிகரமாக நீந்தி செல்லுங்கள். 02. அலைகள் வருகின்றபோது அவற்றை பயன்படுத்தினால் உதவி பெறலாம். தவறினால் நம் முயற்சி தோற்றுவிடும். 03. பயம் மற்றும் தோல்விக்கு நாம் இடம் கொடுத்தால் அவை நம்மை பள்ளத்திலும் துன்பத்திலும் தள்ளிவிடும். 04. தோல்வியடையாதவன் உழைத்திருக்கமாட்டான் எதற்கும் ஆசைப்பட்டிருக்கவும் மாட்டான். 05. சில சமயங்களில் நாணயமான ஒரு தோல்வியும் புகழ் பெற்ற வெற்றியாக ஏற்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறது. 06. உலக வரலாற்றில் வெற்றிகளை விட தோல்விகள்தான் அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளன. 07. தோல்வியால் துவண்ட மனிதர்களே எழுந்து நில்லுங்கள் மறுபடியும் செயற்படுங்கள்.. ! உலகம் என்ற உழைப்பு அறையில்…

‘சர்கார்’ படத்துக்காக 7 நாளில் ‘டப்பிங்’ பேசி முடித்த விஜய்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் வருகிறார். வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோரும் உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து டப்பிங், கிராபிக்ஸ், இசை கோர்ப்பு பணிகள் நடக்கின்றன. விஜய் 7 நாட்களில் இந்த படத்துக்கு டப்பிங் பேசி முடித்துள்ளார். அடுத்த மாதம் இசை வெளியீட்டு விழா நடக்கிறது. தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வந்த துப்பாக்கி, கத்தி படங்கள் நல்ல வசூல் பார்த்தன என்பதால் சர்கார் படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் முதல் பாதியில் அமெரிக்காவில் வசிக்கும் தொழில் அதிபராகவும் அதன்பிறகு அரசியல்வாதியாகவும் விஜய் நடிப்பதாக தகவல். ஆனாலும் படக்குழுவினர் இதை உறுதிப்படுத்தவில்லை. ஏற்கனவே சர்கார் படத்தின் முதல் தோற்றம் வெளியானபோது சர்ச்சையில் சிக்கியது. அதில் விஜய்…

பிரேசில் வேட்பாளருக்கு கத்திக்குத்து

பிரேசில் அதிபர் தேர்தலின் முன்னணி வேட்பாளர்களில் ஒருவரான ஜயார் போல்சேனார்ரூ தேர்தல் பரப்புரை பேரணி ஒன்றில் கத்தியால் குத்தப்பட்டார். தென்கிழக்கு மாநிலமான மினாஸ் ஜெராய்ஸ் ஜூய்ஸ் டி ஃபோரா நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பேரணியில் தீவிர வலதுசாரி அரசியல்வாதியான இவர் தாக்கப்பட்டுள்ளார். அவரது கல்லீரல் மற்றும் குடல் காயங்களுக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அவரது உடல்நிலை, தற்போது சீராக இருப்பதாக அவரது மகன் தெரிவித்துள்ளார். இனவெறிக்கு ஆதரவான மற்றும் ஒருபாலுறவுக்கு எதிரான தன்னுடைய நிலைபாடுகளால் பிரேசிலிலுள்ள பலரையும் கோபத்திற்குள்ளாக்கியுள்ள சர்ச்சைக்குரிய இந்த அரசியல்வாதி, சமீபத்திய தேர்தல்களில் சாதகமான முடிவுகளை பெற்றிருந்தார். இந்த அதிபர் தேர்தலில் நிற்பதற்கான தடையை மாற்றுவதற்கான முயற்சியில் முன்னாள் அதிபர் லூலா டி சில்வா தோல்வியடைந்தால், அடுத்த மாதம் நடைபெறுகின்ற அதிபர் தேர்தலில் ஜயார் போல்சேனார்ரூ அதிகபடியான வாக்குகளை பெறலாம் என்று கருத்துக்கணிப்புகள்…

இன்று மாலை வெளியாகிறது ரஜினி படத்தின் தலைப்பு

ரஜினி நடித்துவரும் படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ரஜினி நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது ‘2.0’. ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்தில், எமி ஜாக்சன் மற்றும் அக்‌ஷய் குமார் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம், வருகிற நவம்பர் 29-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘2.0’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கும் முதல் ரஜினி படம் இது. ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன்…

மெக்சிகோவில் கண்டெடுக்கப்பட்ட 166 உடல்கள்

மெக்சிகோவின் வெராகர்ஸ் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் 166 உடல்கள் குவியலாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மெக்சிகோ போலீஸ் சார்பில், ‘‘உடல்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தை தற்போது பாதுகாப்பு காரணங்கள் கருதி எங்களால் கூற முடியாது. போதை பொருட்கள் கடத்துவதற்கு பல வருடங்களாக வெராகர்ஸ் மாகாணம் கடத்தல்காரர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு 250 மண்டை ஓடுகள் இந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. உடல்கள் கைப்பற்றப்பட்டது குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்றனர். கண்டெடுக்கப்பட்ட உடல்களுடன், ஏராளமான ஆடைகளும், அடையாள அட்டைகளும் கண்டுப்பிடிக்கப்பட்டதாக மெக்சிகோ ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெக்சிகோவை பொறுத்தவரை அங்கு போதை பொருட்கள் கடத்தல் அதிகளவு நடைபெறுகிறது. இதன் காரணமாக அங்கு எழும் தொழில் போட்டிக் காரணமாக அங்கு கொலைகள் அதிகளவில் நடத்தப்படுகிறது. கடந்த 2006 முதல் இதுவரை 2 லட்சம்…

பாஜக எம்எல்ஏவின் நாக்கை அறு

தொண்டர்களுக்காக பெண்களைக் கடத்துவேன் என்று பேசிய பாஜக எம்எல்ஏ ராம் கதமின் நாக்கை அறுத்துக் கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு தரப்படும் என்று மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுபோத் சாவோஜி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இங்கு முதல்வராகத் தேவேந்திர பட்நாவிஸ் உள்ளார். காட்கோபர் தொகுதி பாஜக எம்எல்ஏ ராம் கதம். சமீபத்தில் ஜென்மாஷ்டமி அன்று மும்பையில் உரியடித்தல் போட்டி நடத்தப்பட்டது. அந்தப் போட்டியின் போது பாஜக தொண்டர்கள் மத்தியில் எம்எல்ஏ ராம்கதம் பேசுகையில்," நீங்கள் எந்தப் பெண்ணை காதலித்தாலும் என்னிடம் வந்து சொல்லுங்கள் அந்த பெண் யாராக இருந்தாலும் அவரைக் கடத்திவந்து உங்களிடம் தருகிறேன். என்னுடைய செல்போன் எண்ணைக் குறித்துக்கொள்ளுங்கள்" என்று தெரிவித்தார். பாஜக எம்எல்ஏ ராம் கதம் பேசிய வீடியோவை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ ஜிதேந்திர…

முழு நேர அரசியலில் இறங்கிவிட்டேன்

இன்னும் ஓரிரு நாட்களில் புதிய பெயரில் அரசியல் கட்சி தொடங்கவிருப்பதாக, நடிகர் கார்த்திக் தெரிவித்திருக்கிறார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக், “2016 -ம் ஆண்டுக்குப் பிறகு சில நெருடல்களால் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தேன்” என தெரிவித்தார். அவரிடம் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கார்த்திக், “பகுதி நேர அரசியல்வாதியாக இருக்கக் கூடாது. அது எனக்கும் பொருந்தும். இனி முழு நேர அரசியலில் இறங்கியுள்ளேன். அரசியலில் அவர்கள் இருவருக்கும் நான் சீனியராக இருக்கலாம். ஆனால், வயதிலும், சினிமாவிலும் அவர்களுக்கு நான் ஜூனியர். ஆனால், நான் யாருக்கும் சளைத்தவன் அல்ல என்பதை கர்வத்துடன் சொல்வேன்” என தெரிவித்தார். மறைந்த மூத்த நடிகர் முத்துராமனின் மகன் கார்த்திக். பல தமிழ் திரைப்படங்களில் நடித்த கார்த்திக், பார்வர்டு பிளாக் கட்சியில்…

அமெரிக்காவை பாதுகாக்க அதிகாரிகள் முயற்சி

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மோசமாக நாட்டங்களில் இருந்து அமெரிக்காவை பாதுகாக்க ஜனாதிபதியின் திட்டத்தில் இருக்கும் சில பகுதிகளை முடக்குவதற்கு நிர்வாக உறுப்பினர்கள் பணியாற்றி வருவதாக டிரம்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி டிரம்பின் “இரக்கமற்ற தன்மை” மற்றும் “தொலைநோக்கில்லாத செயல்பாடு” ஆகியவை தவறான தகவல்களுக்கும், பொறுப்பற்ற முடிவுகளுக்கும் வழிவகுத்தன என்று நியூ யோர்க் டைம்ஸ் தலையங்கத்தில் கட்டுரையாசிரியர் எழுதியிருந்தார், பெயர் குறிப்பிடாமல் இந்த கட்டுரையை எழுதியிருந்தவரை தைரியமில்லாதவர் என்றும், இந்த செய்தித்தாளை போலியானது என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு திருப்பத்தையும் ஏற்படுத்த முடியாது போன பேரணி

அதிகாரத்தைக் கைப்பற்றப் போவதாகக் கூறிக்கொண்டு மக்கள் பேரணியை திரட்டிவந்தபோதும் பொதுஜன பெரமுனவினால் அதனைச் சாதிக்க முடியாது போனதாகவும், ஒரே இரவுக்குள் அவர்களது போராட்டம் சுருண்டுவிட்டதாகவும் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவர்களது மக்கள் பேரணியால் எந்தவொரு வரலாற்றுத் திருப்பத்தையும் ஏற்படுத்த முடியாது என்றும் போராட்டம் வெறும் காற்றுப் போன பலூனாகி விட்டதாகவும் சுட்டிக்காட்டினார். வளம் கொழிக்கும் பொருளாதார பலம்கொண்ட நாடாக இலங்கையை 2025 ஆம் ஆண்டாகும்போது மாற்றியமைக்கும் இலக்கு நோக்கிய பயணத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த இலக்கை வெற்றி கொள்ளும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியை வலிமை மிக்க கட்சியாக மாற்றியமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். கிராமிய மட்டத்திலிருந்து கட்சியை கட்டியெழுப்பும் நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்திருப்பதாகவும் கட்சியின் அமைப்பாளர்கள் அதனைச் சரிவர நிறைவேற்ற வேண்டுமெனவும் அதற்கேற்ற அரசியலைச் செய்ய…