வேலணையூர் பொன்னண்ணாவுக்கு இங்கிலாந்தில் நினைவாஞ்சலி

காலஞ்சென்ற டென்மார்க் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களுடைய நினைவாஞ்சலி கூட்டமொன்று இங்கிலாந்தில் உள்ள ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தில் வரும் 09.09.2018 ஞாயிறன்று மாலை 15.00 முதல் 19.00 மணிவரை நடைபெற இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியை இங்கிலாந்தில் உள்ள வேலணை ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது. வேலணை ஒன்றிய முக்கியஸ்தர்கள், புலம் பெயர் சைவ அறிஞர்கள், வேலணை கிழக்கு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், வேலணை மத்திய கல்லூரி மாணவர் சங்கம், சைவ முன்னேற்றச் சங்கம், சைவ திருக்கோயில் ஒன்றியம் ஆகியவற்றின் உறுப்பினர் உரை நிகழ்த்துவர்.

இதுபோல ஒரு நிகழ்வு வேலணையிலும் நடைபெற்றது, அந்தவகையில் இது இரண்டாவது முக்கிய நிகழ்வாகும். டென்மார்க்கிலும் கவிஞருக்கான அஞ்சலி நிகழ்வை நடத்த தமிழ் கலைஞர்கள் சங்கம் ஆர்வம் தெரிவித்து சம்மந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளது.

அலைகள் 31.08.2018

ponn

Related posts

Leave a Comment